ஓய்வு நேரத்தில் குழந்தைகளோடு கொஞ்சல்.. பாசக்கார டோணி, தவான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போர்ட் ஆப் ஸ்பைன்: மேற்கு இந்திய தீவில் உள்ள டிரினிடாட்டில் இரு ஒருநாள் சர்வதேச போட்டிகளை முடித்துக் கொண்டு ஆன்டிகுவா செல்லும் வழியில் தங்கள் குழந்தைகளுடன் டோணியும் தவானும் நேரத்தை செலவிட்டனர்.

லண்டனில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி போட்டி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் 5 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளையும், ஒரு டி 20 போட்டியையும் விளையாட மேற்கு இந்திய தீவுகளுக்கு புறப்பட்டனர். அதில் முதல்போட்டி போர்ட் ஆப் ஸ்பைனில் டிரினிடாட்டில் உள்ள குயின் பார்க் மைதானத்தில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

பின்னர் 2-ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி அதே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றி கண்டது.

3, 4-ஆவது போட்டி

3, 4-ஆவது போட்டி

இந்நிலையில் 3-ஆவது மற்றும் 4-ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் முறையே வரும் 30-ஆம் தேதியும், ஜூலை 2-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள டிரினிடாட்டில் இருந்து இந்திய வீரர்கள் ஆன்டிகுவா சென்றனர்.

குடும்பத்தினருடன் குதூகலம்

ஆன்டிகுவா செல்லும் போது டோணியும், தவானும் மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ந்தது குறித்து தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் டோணியின் மகள் ஸிவாவும் தவானின் மகன் ஜோராவரும் இணை பிரியாத நண்பர்களாகிவிட்டனர்.

பிராவோ குழந்தைகளுடன் சாக்ஷி

முன்னதாக மேற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் பிராவோ வீட்டுக்கு டோணி, தவான், ரஹானே உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இதுகுறித்து அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். டோணியின் மனைவி சாக்ஷி, பிராவோ, தவானின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படமும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former India skipper MS Dhoni and his teammate Shikhar Dhawan's family were seen spending quality time as they travelled for Antigua from Trinidad after playing first two ODIs.
Please Wait while comments are loading...