முதல் டெஸ்ட்.. 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஊதி தள்ளியது இந்தியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

காலேயில் நடைபெற்ற இந்த டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களையும், இலங்கை 291 ரன்களையும், இந்தியா 2வது இன்னிங்சில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களையும் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

India won 1st Test against Srilanka by 304 runs

இன்று 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 245 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால்ல இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். திமுத் கருணரத்னே அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
1st Test India beat Sri Lanka by 304 runs to take 1-0 lead in 3-match series. Virat Kohli picks a souvenir stump as India dominate in Galle.
Please Wait while comments are loading...