ஐசிசி பைனல்.. ரொம்பவே சொதப்பிய இந்திய பவுலர்கள்.. விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர். 20 ஓவர்களை கடந்த பின்னரே இந்திய அணி முதல் விக்கெட்டை கைப்பற்றியது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் ஆதரவாக ரசிக பெருமக்கள் குவிந்துள்ளனர்.

 Indian bowling is not helping to take pakistan players

தொடக்கத்தில் இருந்தே கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் இந்திய வீரர்கள் நழுவ விட்டு வருகின்றனர். இதனால் 22 ஓவர்கள் வரை இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறியது.

23வது ஓவரிலேயே இந்திய அணி முதல் விக்கெட்டை கைப்பற்றியது. அசார் அலியின் அவசரத்தாலும் ஃபக்கர் ஸமாமின் சுயநலத்தாலும் 23வது ஓவரில் இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது.

ஆம் நின்று ஆடிய அசார் அலி 23வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்திய பந்துவீச்சு கொஞ்சமும் சாதகமாக இல்லை. அதற்குமேல் ஃபீல்டிங் படுமோசமாக உள்ளது.

இதனை பக்காவாக பயன்படுத்தி வருகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் வீரர்கள் நிதானமாக அடித்து ஆடி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian bowling is not helping to take pakistan players. Indian bowlers also not shine against the pakistan match.
Please Wait while comments are loading...