பெரிய டீம்களுக்கு ஷாக் கொடுக்கும் கத்து குட்டிகள்.. அரையிறுதி கிலியில் இந்திய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தை பாகிஸ்தான் அணி முதலாவது அரையிறுதியில் தோற்கடித்துள்ளது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி மீது இந்திய ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது.

இப்போட்டியில் இந்திய அணி எளிதில் வங்கதேசம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால், இங்கிலாந்து எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா வங்கதேசம் போட்டிக்கு பலத்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவுக்கே நெருக்கடி

இந்தியாவுக்கே நெருக்கடி

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த வங்கதேச கேப்டன் மஷ்ரப் மோர்டசா, இந்திய அணிக்கே தங்களை விட அதிக நெருக்கடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், நாங்கள் அரையிறுதியில் விளையாடுகிறோம். இது கஷ்டமான போட்டிதான். ஆனால் எங்களுக்கு உள்ள நெருக்கடியை விட இந்திய அணிக்கு தான் கூடுதல் நெருக்கடி. ஏனெனில் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் கிரிக்கெட்டை அதிக அளவில் நேசிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

ஷாக் தோல்விகள்

ஷாக் தோல்விகள்

சாம்பியன்ஸ் தொடரில் இதுவரை தரவரிசையில் மேல் வரிசையில் உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவுக்கு வங்கதேசமும் (மழை முக்கிய காரணம்), இந்தியாவுக்கு இலங்கையும், அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் வங்கதேசம் அதிர்ச்சியயளித்துவிடுமோ என்ற பயம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

முதலாவது அரையிறுதியில் சொந்த மண்ணில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை, பாகிஸ்தான் எளிதாக வீழ்த்திவிட்டது. இது அச்சத்தை அதிகரித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு.

தேவை அதிருஷ்டம்

தேவை அதிருஷ்டம்

திறமை மட்டுமின்றி, அதிருஷ்டமும், சமயோஜித புத்திசாலித்தனமும் இருந்தால் மட்டுமே இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியும். போட்டியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதே மக்கள் கருத்து.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian Cricket fans are in excitement ahead of India-Bangladesh match, as small teams like Pakistan has been given shock to big teams like England.
Please Wait while comments are loading...