இந்திய பந்துவீச்சை பஞ்சுபஞ்சாக்கி பறக்கவிட்ட பாகிஸ்தான்! 338 ரன்கள் குவிப்பு! #INDvPAK #INDvsPAK

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய அணியின் பந்து வீச்சை சரியாக பதம் பார்த்து வருகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் வீரர்கள். 50 ஓவர்கள் முடிவில் 338 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் மினி உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் தொடக்கம் முதலே நிதானமாக ஆடினர்.

Indian cricket team is testing their fans patients

டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. ஏன்டா அவர்களுக்கு பேட்டிங் கொடுத்தோம் என நினைக்கும் அளவுக்கு நிதானமாகவும் அதேநேரம் அடித்தும் விளையாடி வருகிறது.

பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பிய இந்திய அணியின் பவுலர்கள் எக்ஸ்ட்ராஸ்களை அள்ளி கொடுக்கவும் தவறவில்லை. பராபட்சமின்றி அள்ளிக்கொடுத்தனர். பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பி கேசரி கிண்டியது இந்திய அணி.

இனி பேட்டிங் கைக்கொடுத்தால் மட்டுமே கப் வாங்கும் கனவு நனவாகும் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் பேட்டிங்கிலாவது நிரூப்பிப்பார்களா என.

தொடக்கத்தில் இருந்தே ஒரு முடிவோடு ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய பந்துவீச்சை பஞ்சுபஞ்சாக்கி பறக்கவிட்டனர். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்திருந்தது.

அதிகளவாக அந்த அணியில் ஃபக்கர் ஸமான் 114 ரன்களும், அசார் அலி 59 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 339 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கையும் பெரும் நெருக்கடியும் கொடுத்துள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian cricket team is testing their fans patients. Indian bowlers not doing well against paskistan
Please Wait while comments are loading...