For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அனல் பறந்த பந்து வீச்சில் தகர்ந்த சாதனைகள்.. டோணியாலும் முடியாததை முடித்த சாஹா!

By Veera Kumar

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணியை 130 ரன்களிலேயே சுருட்டியது இந்தியா.

இதன் மூலம், இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றியை பெறும் முனைப்போடு இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

தென் ஆப்பிரிக்க மண்ணிலேயே அந்த அணியை 2வது இன்னிங்சில் தெறிக்க விட்டுள்ளனர் இந்திய பந்து வீச்சாளர்கள். இதில் பல சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.

பும்ரா புயல்

பும்ரா புயல்

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் இரு இன்னிங்சுகளிலும் பும்ரா பந்ததுவீச்சில் அவுட்டானார். பும்ராவுக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி என்பது சிறப்பு. டிவில்லியர்ஸ் இதற்கு முன்பாக 2 இன்னிங்சுகளிலும், ஒரே பவுலரால் அவுட் செய்யப்பட்டது 2015ல் மட்டுமே. மொகாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா பந்து வீச்சில் இரு இன்னிங்சுகளிலும் அவுட்டானார். அதன்பிறகு, பும்ரா அந்த தருணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

புது சாதனை

புது சாதனை

இந்திய விக்கெட் கீப்பர்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக விருதிமான் சாஹா ஒரே டெஸ்ட் போட்டியில் 10 கேட்ச்கள் பிடித்து புது சாதனை படைத்துள்ளார். மோங்கியா, டோணி போன்ற இந்தியா கண்ட தலைசிறந்த டெஸ்ட் போட்டி, விக்கெட் கீப்பர்களாலும் முடியாத இந்த சாதனை இன்று சாஹாவால் நிறைவேறியுள்ளது. இதற்காக இந்திய அணியின் திறமையான வேகப் பந்து வீச்சுக்கும் பாராட்டு சேரும்.

இது எப்படி

இது எப்படி

நேற்றைய ஆட்டம் முழுக்க மழையால் பாதிக்கப்பட்டது. 2வது நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி, 21.2 ஓவர்களில் எஞ்சிய 8 விக்கெட்டுகளை 65 ரன்களுக்கு இழந்தது. ஆக மொத்தம் 130 ரன்களை அந்த அணி சேர்த்தது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இந்த தொடரை வெற்றியோடு தொடங்க இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பை இந்த டெஸ்ட் போட்டி அமைத்துக்கொடுத்துள்ளது. மழை காரணமாக பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளதால், இந்திய பேட்ஸ்மேன்கள் பெரும் சவாலை எதிர்கொண்டே வெற்றிக்கொடி நாட்ட முடியும் என கணிக்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

Story first published: Monday, January 8, 2018, 16:54 [IST]
Other articles published on Jan 8, 2018
English summary
Wriddiman Saha 10 dismissals in this Test match, the most by an Indian wicket-keeper in Tests. India need 208 to win the first test against South Africa.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X