மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. புது உலக சாதனை படைத்த இந்திய அணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, 5 ஒருநாள் போட்டிகள், 1 டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி போர்ட்ஆப்ஸ்பெயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி, 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாதனை

சாதனை

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதன்படி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 96 முறை 300 ரன்களைக்கடந்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 95 முறை 300 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

முதல் சாதனை

முதல் சாதனை

இந்திய அணி, கடந்த 1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக சார்ஜாவில், 300 ரன்களைக் கடந்தது. இதன்பிறகு குறுகிய காலத்தில் இத்தனை முறை 300 ரன்களை கடந்துள்ளது. இந்திய விக்கெட்டுகளின் தன்மையும், இந்திய பேட்ஸ்மேன்களின் திறமையும் இதற்கு முக்கிய காரணம்.

வெற்றிகள்

வெற்றிகள்

இந்தியா 96 முறை 300 ரன்களை கடந்துள்ள நிலையில், அதில் 75 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இவ்வளவு அதிக ரன்களை அடித்தும் 19 முறை பவுலர்கள், ஃபீல்டர்கள் கோட்டை விட்டதால் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிவடைந்தது.

இந்த நாடுகளும்

இந்த நாடுகளும்

இலங்கை 63 முறை 300 ரன்களை கடந்துள்ளது. கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் இங்கிலாந்தோ 57 முறைதான் இந்த சாதனையைபடைத்துள்ளது. நியூசிலாந்து 51 முறை 300 ரன்களை கடந்துள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This was 96th instance when India crossed the 300-run mark in ODIs, surpassing 5-time World Champions Australia (95).
Please Wait while comments are loading...