அட கொடுமையே.. அஸ்வின், நெஹ்ரா ஊதித்தள்ளிய சோதனையில் தேறாத ரெய்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அணியில் இடம்பெற செய்யப்படும் மிக முக்கியமான தேர்வு முறையான யோ யோ டெஸ்டில் ரெய்னா கலந்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே இந்த டெஸ்டில் கலந்து கொண்ட அஸ்வினும், சீனியர் பவுலர் நெஹ்ராவும் அதை வெற்றிகரமா கிளியர் செய்தனர். இந்த நிலையில் நேற்று ரெய்னாவும் கலந்து கொண்டார்.

இந்த தேர்வில் சரியாக பர்பார்ம் செய்யாத ரெய்னா பத்திரிக்கையாளர்களிடம் நேற்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 யோ யோ டெஸ்ட் முறை

யோ யோ டெஸ்ட் முறை

இந்திய அணியில் விளையாடுவதற்கு பெரும்பாலும் நிறைய வித்தியாசமான உடல் தகுதித் தேர்வுகள் வைக்கப்படும். யோ யோ தேர்வு என அழைக்கப்படும் இந்த ஃபிட்னஸ் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இதில் செய்யப்படும் அனைத்து விதமான உடல் சோதனைகளையும் கடந்து மீண்டும் அணியில் இணைவது என்பது பழைய வீரர்களுக்கு மிகவும் கடினமான செயலாகும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். இந்த டெஸ்டின் சரியாக ஓட முடியாதவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது. கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இந்த டெஸ்ட் மிகவும் கடினமான ஒன்றாகும்.

 யோ யோ டெஸ்ட்டில் கலக்கிய அஸ்வினும், நெஹ்ராவும்

யோ யோ டெஸ்ட்டில் கலக்கிய அஸ்வினும், நெஹ்ராவும்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த யோ யோ டெஸ்டில் இந்திய அணியின் பவுலர் நெஹ்ரா கலந்து கொண்டார். இதில் இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக அந்த டெஸ்டை முடித்தார். மேலும் அதன்முலம் அவருக்கு அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாள் முன்பு பெங்களூரில் நடந்த யோ யோ டெஸ்ட்டில் தமிழக வீரர் அஸ்வினும் கலந்து கொண்டார். இதில் மிகவும் சிறப்பாக பர்பார்ம் செய்த அஸ்வின் மொத்த டெஸ்டயும் முழுவதுமாக முடித்தார். இருவரின் உடல் தகுதியும் பலராலும் பாராட்டப்பட்டது.

 யோ யோ டெஸ்டில் ரெய்னா

யோ யோ டெஸ்டில் ரெய்னா

இந்த நிலையில் யோ யோ டெஸ்டில் இந்திய அணி வீரர் ரெய்னாவும் கலந்து கொண்டார். நீண்ட நாட்களா அணியில் இடம்பெற முடியாமல் இருந்துவரும் ரெய்னா தன்னுடைய உடல் தகுதியை நிரூபிப்பதற்காக இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பினார். ஆனால் ரெய்னா நினைத்து போல் இல்லாமல் இந்தத் தேர்வு மிகவும் கடினமானதாக இருந்திருக்கிறது. இதில் சரியாக பர்பார்ம் செய்ய முடியாத ரெய்னா , முழுவதுமாக அதை முடிக்க முடியாமல் தோல்வி அடைந்தார்.

 கோபப்பட்ட ரெய்னா

கோபப்பட்ட ரெய்னா

இந்த நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரெய்னாவிடம் இந்த யோ யோ டெஸ்ட் குறித்து கேட்கப்பட்டது. அப்போது மிகவும் கோவமாக இருந்த ரெய்னா "இது குறித்து நான் எந்த பதிலும் அளிக்க மாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் பிசிசிஐயிடம் இது குறித்து கேட்டுக் கொள்ளுங்கள். 30 வயதில் அணியில் இடம்பெறுவதற்காக நான் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன். என் உடல் தகுதியை நிரூபித்து விரைவில் அணியில் இடம்பெறுவேன்" என்று கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian player Raina participated in yo-yo test. Due to lack of speed, he has failed miserably in the test.
Please Wait while comments are loading...