என்னப்பா இவ்வளோ அலட்சியமா விளையாடுறீங்க? டென்ஷன் ஆகுதுல்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களின் ஃபீல்டிங் ரசிகர்களை டென்ஷனாக்கி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் நழுவவிடுவது கிரிக்கெட் பார்த்து வருபவர்களின் பிபியை எகிற வைக்கிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை பேட்டிங் செய்ய பணித்தது.

Indian team playing carelessly they are missing run outs and wickets

பாகிஸ்தான் வீரர்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர். ஏற்கனவே பும்ரா பந்துவீச்சில் ஃபாகர் ஸமாம் டோணியிடம் கேட்சாக முதல் விக்கெட் என மகிழ்ச்சியில் திளைத்தனர் ரசிகர்கள். ஆனால் அது நோபால் ஆனது.

இதைத்தொடர்ந்து 3 ரன் அவுட்களையும் இந்திய வீரர்கள் மிக லட்சியமாக மிஸ் செய்தனர். கேதார் ஜாதவ், ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் கேவலமாக ஃபீல்டிங் செய்து ரன் அவுட்களை நழுவ விட்டனர்.

ஆட்டம் போறப் போக்கு இந்திய வீரர்கள் அலட்சியமாக ஆடுவது போல் தோன்றுகிறது. இப்படியே போனால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் வீரர்கள் 350 ரன்களை கடந்து விடுவார்களோ என தோன்றுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India vs Pakistan match is happening today due to this fans deployed in the stadium. Pakistan Players playing stedy game. Indian team playing carelessly they missing run outs and wickets. Its making tension to the fans.
Please Wait while comments are loading...