பழைய வரலாற்றை வைத்து பாகிஸ்தானை எடைபோட முடியாது... இந்திய அணிக்கு ரசிகர்கள் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெர்பி: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா அபாரமாக ஆடிய காலத்தை வைத்து தற்போது அசால்ட்டாக இருந்து விடக் கூடாது என்பதே ரசிகர்களின் மனவோட்டம்.

ஐசிசி நடத்தும் மகளிர் உலக கோப்பை போட்டி தொடர் கடந்த மாதம் 24-ஆம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்று வருகின்றன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா ஒரு முறை மோதி வருகின்றன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதி போட்டிக்கு செல்லும்.

 இன்று மோதல்

இன்று மோதல்

இன்று 3-ஆவது ஆட்டமாக பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மாலை 3 மணிக்கு டெர்பி நகரில் உள்ள கவுன்ட்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

 ஒரு முறை கூட வெற்றி இல்லை

ஒரு முறை கூட வெற்றி இல்லை

இதுவரை நடைபெற்ற உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை. இந்த வரலாற்றை வைத்து இந்தியா, பாகிஸ்தான் அணியை எடை போடக் கூடாது.

 நல்ல பந்து வீச்சாளர்

நல்ல பந்து வீச்சாளர்


பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக உள்ள சானா மிர், நல்ல பந்து வீச்சாளரும் கூட.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் உலக பந்து வீச்சாளர்கள் இவர் 6-ஆவது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2010 மற்றும் 2014-இல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இரு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

 முதல் 20 இடங்களில்...

முதல் 20 இடங்களில்...

கடந்த 9 ஆண்டுகளாக ஐசிசி தரவரிசை பட்டியிலில் முதல் 20 இடங்களில் உள்ளார் சானா மிர். மகளிர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தானிய பெண் என்ற பெருமைக்குரியவர்.

 தீவிரமாக விளையாட வேண்டும்

தீவிரமாக விளையாட வேண்டும்

எனவே இதுவரை பாகிஸ்தான் இந்தியாவுடன் ஆடி வெற்றி கண்டதில்லை என்ற பழைய வரலாற்றை வைத்து ஆடினால் அம்போதான். சானா மிர்ரின் சாதனைகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விளையாடினால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian cricket women team should not take old histories of pakistan.
Please Wait while comments are loading...