இன்று இரண்டாவது டி-20.. நெஹ்ராவுக்கு பதில் களம் இறங்கும் புதிய வீரர் இவர்தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
விடைபெற்றார் சாதனை நாயகன் நெஹ்ரா..வீடியோ

ராஜ்கோட்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்தஹ்ரபோது வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி நியூசிலாந்து அணி இந்திய அணியின் 203 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்றார் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மாலை நடக்க இருக்கிறது. மேலும் இந்திய அணியில் ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் புதிய பிளேயர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

 நியூசிலாந்து இந்தியா மோதிய முதல் டி-20

நியூசிலாந்து இந்தியா மோதிய முதல் டி-20

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த முதல் டி-20 போட்டி நியூசிலாந்து அணி இந்திய அணியின் 203 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 நியூசிலாந்து அணி விவரம்

நியூசிலாந்து அணி விவரம்

இந்த நிலையில் சென்ற போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் மிகவும் அதிகமாக சொதப்பினார்கள். முக்கியமாக நியூசிலாந்து அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அணி வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் திட்டியதாக குறிப்பிடப்படுகிறது. அதன்படி ''கேன் வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், கோலின், டாம் லாதாம், ஹென்றி நிக்கோலஸ், ஆடம் மிலான், முன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்சல் சான்டர், இஷ் சோதி, டிம் சவூதி' ஆகியோர்கள் அணியில் இடம்பெற்று விளையாடுவார்கள் என கூறப்படுகிறது.

 இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் பெரிய வகையில் இந்த போட்டியில் மாற்றம் எதுவும் செய்யப்பட இருப்பதில்லை. கோஹ்லி முதல் போட்டி முடிந்த பின் கொடுத்த பேட்டியில் , டி-20 போட்டியில் அதிக பவுலர்களுடன் களம் இறங்குவதையே தான் விரும்புவதாக கூறினார். அதையடுத்து ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் பவுலிங் செய்யக்கூடிய வீரர் விளையாடுவார் என கூறப்பட்டது. எனவே ஆல்ரவுண்டர் முகமது சிராஜ் முதல்முறையாக அணியில் தற்போது இணைந்து இருக்கிறார்.

 இரண்டாவது டி-20

இரண்டாவது டி-20

இந்த நிலையில் மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்றார் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வென்றுவிடும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மாலை நடக்க இருக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian will play the 2nd T20 against New Zealand in Rajkot today evening. Mohammed Siraj will play for India probably.
Please Wait while comments are loading...