For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெய்ல் புயல்-சிம்மண்ட்ஸ் வரை: ஐபிஎல் போட்டிகளின் டாப் 10 ஸ்கோர்ஸ்#IPLTurns10

By Siva

பெங்களூர்: டுவென்ட்டி 20 கிரிக்கெட்டை நினைத்தாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது சிக்ஸும், ஃபோரும் தான். பேட்ஸ்மேன்கள் பந்துகளை அடித்து நொறுக்க இந்த வகை போட்டி உதவுகிறது.

ஐபிஎல் போட்டிகள் 2008ம் ஆண்டு துவங்கப்பட்டபோது ரசிகர்கள் ஸ்டேடியங்களில் குவிந்தனர். டிவி பெட்டிகளுக்கு முன்பு அமர்ந்து போட்டிகளை கண்டு ரசித்தனர், ரசித்து வருகிறார்கள்.

முதல் ஐபிஎல் போட்டி 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி பெங்களூரில் நடந்தது.

IPL 10: Chris Gayle to Andrew Symonds - Here are top 10 scores

கொல்கத்தா அணிக்காக விளையாடிய நியூசிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம் பெங்களூர் அணிக்கு எதிராக 158 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்து அசத்தினார். 2013ம் ஆண்டு போட்டியில் 175 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்து மெக்கல்லத்தின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்.

ஐபிஎல் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 வீரர்கள் பற்றி பார்ப்போம்.

1. ஏப்ரல் 23, 2013ல் பெங்களூரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல் 175 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். (66 பந்துகள், 13x4, 17x6)

2. ஏப்ரல் 18, 2008ல் பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸின் பிரென்டன் மெக்கலம் 158 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். (73 பந்துகள், 10x4, 13x6)

3. மே 10, 2015ல் மும்பையில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடிய பெங்களூர் அணியின் ஏபிடி வில்லியர்ஸ் 133 ரன்கள் ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். (59 பந்துகள், 19x4, 4x6)

4. மே 14, 2016ல் பெங்களூரில் குஜராத் லயன்ஸுக்கு எதிராக ஆடிய பெங்களூர் அணியின் ஏபிடி வில்லியர்ஸ் 129 ரன்கள் ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.(52 பந்துகள், 10x4, 12x6)

5. மே 17, 2012ல் டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் கெய்ல் 128 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். (62 பந்துகள், 7x4, 13x6)

6. ஏப்ரல் 3, 2010ல் சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் முரளி விஜய் 127 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். (56 பந்துகள், 8x4, 11x6)

7. மே 30, 2014ல் மும்பையில் சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் விரேந்தர் சேவாக் 122 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.(58 பந்துகள், 12x4, 8x6)

8. ஏப்ரல் 13, 2011ல் மொஹாலியில் சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பால் வால்தாட்டி 120 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். (63 பந்துகள், 19x4, 2x6)

9. மே 5, 2011ல் ஹைதராபாத்தில் டெக்கன் சார்ஜர்ஸுக்கு எதிராக நடந்த போட்டியில் டெல்லி அணியின் சேவாக் 119 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். (56 பந்துகள், 13x4, 6x6)

10. ஏப்ரல் 24, 2008ல் ஹைதராபாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக நடந்த போட்டியில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியின் ஆன்ட்ரூ சிம்மண்ட்ஸ் 117 எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். (53 பந்துகள், 11x4, 7x6)

Story first published: Tuesday, April 18, 2017, 13:07 [IST]
Other articles published on Apr 18, 2017
English summary
When fans think of Twenty20 cricket what comes to their minds is only big hits from the willows of batsmen. The shortest format of the game is tailor-made to unleash sixes and fours.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X