For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் சாதித்த 10 பெஸ்ட் கேப்டன்கள் இவர்கள்தான்.. டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் என வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் டோணிதான், ஐபிஎல் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

By Veera Kumar

சென்னை: 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் திருவிழா தற்போது 10வயதை தொட்டுள்ளது. இது சிக்சர், பவுண்டரிகள் பறக்கும் பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டாக இருந்த போதிலும், வியூகங்களை மாற்றி, எதிரணியை திணறச் செய்யும் கேப்டன்களுக்கான களமும்தான்.

ஒரு பந்து கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடக் கூடிய விளையாட்டுதான், டி20 போட்டி. இப்படிப்பட்ட கம்பிமேல் நடக்கும் விவகாரத்தில் சக்சஸ்சாக காய் நகர்த்திய கேப்டன்கள் ஒரு சிலரே.

இப்படி தங்கள் வியூகங்களால் ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றியை தங்களுடைய அணிக்கு பெற்றுத் தந்த 10 பெஸ்ட் கேப்டன்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க நினைக்கிறோம்.

டோணி டாப்

டோணி டாப்

இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் என வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் டோணிதான், ஐபிஎல் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் இவ்வாண்டு மற்றும் இதற்கு முந்தைய ஆண்டு ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் தடைக்குள்ளாக்கியது. ஆனால் அதுவரை 8 சீசன்களிலும் சிஎஸ்கே அணி கேப்டனாக இருருந்து அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தவர் டோணிதான்.

பல கோப்பைகள்

பல கோப்பைகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும், ரைசிங் புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணி என மொத்தம் 143 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார் டோணி. டோணி தலைமையின்கீழ் இந்த அணிகள் மொத்தம் 83 வெற்றிகளை பெற்றுள்ளன.59 போட்டிகளை மட்டுமே இழந்துள்ளன. வெற்றி சதவீதம் 58.45 ஆகும். இது ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன்ஷிப்களில் ஒன்றாகும். டோணி தலைமையிலான சிஎஸ்கே அணி இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி அனைத்து முறையும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் வென்றுள்ளது.

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

கம்பீர் ஆரம்பத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாகவும், பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். 2012 மற்றும் 2014ல் இவரது தலைமையில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. கம்பீர் தலைமையேற்ற, 112 போட்டிகளில், அவரது அணி, 65 முறை வெற்றியும், 46 முறையும் தோல்வியுமடைந்துள்ளன. இவரது வெற்றி விழுக்காடு 58.48 ஆகும்.

ரோகித் ஷர்மா

ரோகித் ஷர்மா

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா, தலைமையேற்ற 63 போட்டிகளில் அவரது அணி 38 போட்டிகளில் வென்றுள்ளது. 25 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இவரது வெற்றி சதவீதம் 60.31 ஆகும்.

விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி

2011 முதல் கோஹ்லி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டனாக 75 போட்டிகளில், செயல்பட்டுள்ள கோஹ்லி, 37 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 33 போட்டிகள் தோல்வியில் முடிவடைந்தன. 2 போட்டிகள் டையில் முடிவடைந்தன. கோஹ்லியின் வெற்றி சதவீதம் 52.77 ஆகும்.

ஆடம் கில்கிறிஸ்ட்

ஆடம் கில்கிறிஸ்ட்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கில்கிறிஸ்ட், முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும், பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் 2008 முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செயல்பட்டார். 2009ல் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம வென்றது. 74 போட்டிகளுக்கு தலைமையேற்ற கில்கிறிஸ்ட் அதில் 35 போட்டிகளில் வெற்றுக்கு காரணமாக இருந்தார். 39 போட்டிகளில் அவரது தலைமையிலான அணி தோல்வியடைந்தது. இவரது வெற்றி சதவீதம் 47.29 ஆகும்.

ஷேன் வார்னே

ஷேன் வார்னே

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்றார். முதலாவது ஐபிஎல் சீசனிலேயே அந்த அணி பட்டம் வென்றது. 55 போட்டிகளுக்கு இவர் தலைமையேற்றுள்ளார். இதில் 30 போட்டிகளில் வெற்றியும், 24 போட்டிகளிலும் தோல்வியும் கிடைத்தது. ஒரு போட்டி டையில் முடிவடைந்தது. இவரது வெற்றி சதவீதம் 55.45 ஆகும்.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக உள்ள வார்னர் கடந்த வருடம் அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் கேப்டனாக இருரந்துள்ளார். 39 போட்டிகளில் 22ல் வெற்றியும் 17ல் தோல்வியும் கிடைத்துள்ளது. வெற்றி சதவீதம் 56.41 ஆகும்.

வீரேந்திர சேவாக்

வீரேந்திர சேவாக்

சேவாக் டெல்லி மற்றும் பஞ்சாப் அணி கேப்டனாக செயல்பட்டவர். சேவாக் தலைமையில் அணி 53 போட்டிகளில் ஆடி, 29ல் வெற்றி பெற்றுள்ளது. 24ல் தோல்வியடைந்துள்ளது. வெற்றி சதவீதம் 53.77 ஆகும்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் 2008 முதல் 2011 வரை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக செயல்படுகிறார். 51 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 30ல் வெற்றிவாகை பெறச் செய்தார். வெற்றி சதவீதம் 58.82 ஆகும்.

டிராவிட்

டிராவிட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2008 முதல் 2013 வரை கேப்டனாக செயல்பட்டவர் டிராவிட். இவரது தலைமையின்கீழ் 22 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி, 26 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. வெற்றி சதவீதம் 45.83 ஆகும்.

Story first published: Thursday, April 20, 2017, 15:16 [IST]
Other articles published on Apr 20, 2017
English summary
In the last 9 years, we have witnessed some incredible leaders who took their franchises to new heights because of their astute captaincy skills and knack to get the best out of their players. India's most successful captain MS Dhoni sits comfortably at the top of the table.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X