For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2015: டிவியில் அதிகம் பேர் பார்த்த போட்டி சென்னை விளையாடியதாமே!

By Veera Kumar

சென்னை: ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லியுடன் மோதிய ஆட்டத்தைதான் அதிகம் பேர் டிவியில் பார்த்துள்ளனராம். அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 42 சதவீதம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாக சொல்கிறது டிஆர்பி தகவல்கள்.

ஐபிஎல் நடப்பு சீசனின் முதல் 5 போட்டிகளுக்கான தொலைக்காட்சி டிஏஎம் ரிப்போர்ட்டுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுவரை 105 மில்லியன் மக்கள் ஐபிஎல் பார்த்துள்ளனர். இது கடந்த சீசனை விட 9 சதவீதம் அதிகமாகும்.

IPL 2015 rules prime time slot on TV! TAM ratings show 'India ka tyohaar' is viewers' first choice

ஆனால், ஐபிஎல் போட்டிகளுக்கு அதிக நேரம் செலவிட்டு பார்க்கும் அடிப்படையில், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 42 சதவீத முன்னேற்றம் கண்டுள்ளது. ஏனெனில் முதல் ஐந்து போட்டிகளுக்கான டிவிஆர் ரேட் விகிதம், கடந்த ஐபிஎல் ஆட்டத்தில் 3.1-ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு, அது 4.5-ஆக அதிகரித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் 1 வாரத்தில் ரசிகர்கள் சராசரியாக ஒவ்வொரு போட்டியையும், சுமார் 51 நிமிடங்கள் 44 விநாடிகள் கண்டுகளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இது, 42 நிமிடம், 27 வினாடிகளாகத்தான் இருந்தது. இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட போட்டியாக சாதனை படைத்துள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் இடையேயான போட்டி. அந்த போட்டிக்கான தொலைக்காட்சி டிவிஆர் ரேட்டிங் 4.7-ஆக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் போட்டிக்கான ரேட்டிங் 4.5-ஆக இருந்தது.

கிரிக்கெட் மீதான மோகம், மக்களிடம் கூடியுள்ளது என்பதை இந்த ரிப்போர்ட் எடுத்துக் காட்டுகிறது.

Story first published: Saturday, April 18, 2015, 17:04 [IST]
Other articles published on Apr 18, 2015
English summary
Apart from entertaining the audiences with its thrilling contests, the ongoing edition of Indian Premier League (IPL), which is being promoted as 'India Ka tyohaar', has also brought cheers on the faces of its broadcasters.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X