டெல்லி டேர்டெவில்ஸ்சுக்கு மற்றொரு டெரர் வெற்றி.. பஞ்சாப்பை பஞ்சராக்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைய 51 ரன்கள் வித்தியாசத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோற்கடித்தது.

டெல்லியில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.

IPL 2017: Delhi Daredevils beat Kings XI Punjab by 51 runs

சாம் பில்லிங்ஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் விளாசினார். இதனையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபடி இருந்தது.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 51 ரன்களல் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அக்சர் பட்டேல் 29 பந்துகளில் அதிகபட்சமாக 44 ரன்களை குவித்து, ஆட்டத்தின் கடைசி பந்தில் அவுட்டானார். எதிபார்க்கப்பட்ட கேப்டன் மேக்ஸ்வெல் டக்கவுட்டானது பஞ்சாப் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

டெல்லி அணிக்காக கிறிஸ் மோரீஸ் அதிகபட்சம் 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi Daredevils (188/6) beat Kings XI Punjab (137/9) by 51 runs. Axar 44, Morris 3/23,Nadeem 2/13 #IPL2017 #DDvKXIP
Please Wait while comments are loading...