டோணி அடிச்சாரு பாரு சிக்ஸர்: ஸ்டேடியம் கூரையை தாண்டிப் போயிருச்சு மச்சி பந்து.. இதோ வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஞாயிற்றுக்கிழமை டோணி அடித்த சிக்ஸர் தான் இந்த ஐபிஎல் சீசனில் பந்து அதிக தூரம் சென்ற சிக்ஸர் ஆகும்.

இந்த ஐபிஎல் சீசனில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோணியை நீக்கியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் டோணி ஃபார்மில் இல்லை என்று ஆளாளுக்கு விமர்சிக்கத் துவங்கினர்.

இதை பார்த்த டோணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்துவிட்டனர்.

டோணி

டோணி

டோணி டக்கவுட் ஆனாலும், சிக்ஸர் அடிச்சாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் பேராதரவை தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு

பெங்களூரு

கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் போட்டி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

சிக்ஸர்

சிக்ஸர்

நேற்றைய போட்டியில் டோணி சூப்பராக ஒரு சிக்ஸர் அடித்தார். அப்போது பந்து ஸ்டேடியத்தின் மேற்கூரையில் போய் விழுந்தது. இந்த சீசனில் அதிக தூரம் சென்ற சிக்ஸ் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி

டோணிக்கு ஃபார்ம் இல்லை என்று கூறினீர்களே இப்ப என்ன சொல்வீங்க, இப்ப என்ன சொல்வீங்க என்று அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைய போட்டியில் புனே அணி பெங்களூர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dhoni has hit the biggest six of the 2017 Indian Premier League season after the ball he hit landed on the roof of Chinnaswamy Stadium in Bengaluru.
Please Wait while comments are loading...