For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை த்ரில் வெற்றி.. கொண்டாட்ட வெறியில் ஷேம், ஷேம் பப்பி ஷேமான இங்கிலாந்து வீரர்! வைரல் வீடியோ

By Veera Kumar

லண்டன்: மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதும், இடுப்பில் கட்டியிருந்த டவலை ஆர்வத்தில் அவிழ்த்து சுற்றி ஆடியுள்ளார் அந்த அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் ஜோஸ் பட்லர். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அழைப்பை ஏற்று அந்த நாட்டு அணிக்காக ஆடுவதற்காக தாயகம் திரும்பிவிட்டார் அவர்.

புனே அணிக்காக ஆடிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்சும் இதேபோல தாயகம் திரும்பிவிட்டார்.

த்ரில் போட்டி

த்ரில் போட்டி

இருப்பினும், ஜோஸ் பட்லர் நேற்றைய ஐபிஎல் பைனல் போட்டியை தனது வீட்டில் நண்பர்களோடு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் மும்பை வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது.

டிரா ஆகும் வாய்ப்பு

டிரா ஆகும் வாய்ப்பு

அந்த பந்தை ஜான்சன் வீச, கிறிஸ்டியன் அதை லெக் திசையில் அடித்துவிட்டு ஓடினார். 3 ரன்கள் ஓடினாலும் ஆட்டம் டிராவில் முடிவடையும் நிலை இருந்தது. அப்படி நடந்தால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படும்.

டிவியில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார்

டிவியில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார்

எனவே 3வது ரன்னும் ஓட கிறிஸ்டியன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி முயன்றது. அப்போது பவுண்டரி எல்லையில் ஃபீல்டர் பந்தை பிடிப்பதில் தடுமாற்றம் அடைந்தார். இதை டிவியில் பார்த்த ஜோஸ் பட்லர், "த்ரோ இட், த்ரோ இட்..ட என கத்தி கூச்சலிட்டார். அந்த பந்தை விக்கெட் கீப்பரிடம் ஃபீல்டர் ஒருவழியாக எறிந்துவிட்டார்.

1 ரன்னில் வெற்றி

1 ரன்னில் வெற்றி

பந்தை லாவகமாக பிடித்த விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் ஸ்டெம்பில் அடிக்க, 3வது ரன்னுக்கான வாய்ப்பு புனே அணிக்கு தடைபட்டது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

வீடியோ

இதை பார்த்த பட்லர் தான் இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து குத்தாட்டம் போட்டார். இது வீடியோவில் பதிவாகியிருந்த நிலையில், அவரே அதை தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Story first published: Monday, May 22, 2017, 13:09 [IST]
Other articles published on May 22, 2017
English summary
England's Jos Buttler, took the term 'wild celebration' to a new level after the last bowl was bowled.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X