பந்து பொறுக்கி போடவும், பீர் குடிக்கவுமா பென் ஸ்டோக்ஸ் ஓடி போனார்? - பீட்டர்சன் விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே: ரூ.14.5 கோடி மதிப்புள்ள புனே அணியை சேர்ந்த, காஸ்ட்லி வீரரான பென் ஸ்டோக்ஸ் முக்கியமான நேரத்தில் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிவிட்டார்.

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான புனே அணி நடப்பு சீசனின் தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் விவேகமாக விளையாடி வெற்றிக் கனிகளை பறித்தது.

புள்ளி பட்டியலில் தற்போது புனே அணி 2வது இடத்தில் உள்ளது. மும்பை முதலிடத்திலுள்ள நிலையில், இன்று இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றில் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

குவாலிபையர்

குவாலிபையர்

பிளேஆப் குவாலிபையர் ரவுண்ட் என்பது அரையிறுதியை போன்றது. இதில் வெற்றி பெற்றால் நேரடியாக பைனலுக்கு போக முடியும். தோற்றால், பெங்களூரில் 19ம் தேதி நடைபெறும் குவாலிபையர்-2 ரவுண்டில், எலிமினேட்டர் ரவுண்டில் வென்ற அணியோடு மோத வேண்டும். அதில் வெல்லும் அணி, பைனலுக்கு வரும்.

இன்று போட்டி

இன்று போட்டி

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை-புனே அணிகள் குவாலிபையர் ரவுண்டில் மோத உள்ளன. 17ம்தேதி பெங்களூரில் எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

அயர்லாந்து போகிறாராம்

அயர்லாந்து போகிறாராம்

ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடைபெறுகிறது. எனவே அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ், 2 அல்லது 3 போட்டிகள்தான் ஆட வேண்டியிருந்திருக்கும். ஆனால், அயர்லாந்து தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால், பென் ஸ்டோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

காஸ்ட்லி வீரர்

காஸ்ட்லி வீரர்

இங்கிலாந்து வீரர்களை அயர்லாந்து டெஸ்டில் ஆட அழைத்துள்ளதால் பென் ஸ்டோக்ஸ், பட்லர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் அங்கு சென்றுவிட்டார். எனவே, முக்கியமான இனிவரும் போட்டிகளில் புனேக்காக ஸ்டோக்ஸ் ஆட முடியாது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.14.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட காஸ்ட்லி வீரர் பென் ஸ்டோக்ஸ்.

பீட்டர்சன் கோபம்

பீட்டர்சன் கோபம்

இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான, கெவின் பீட்டர்சன் கூறியதாவது: இது மோசமான நிகழ்வாகும். ஸ்டோக்ஸ் செமி பைனலிலும், பைனலிலும் ஆடியிருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் கடைசி வாரம் என்பது பெரிய நிகழ்வாகும்.

ஐபிஎல் தொடரால் வளர்ச்சி

ஐபிஎல் தொடரால் வளர்ச்சி

ஸ்டோக்சிடமும், ஜோஸ் பட்லரிடமும் பேசுங்கள். ஐபிஎல் தொடரில் ஆடியதால் அவர்கள் என்த அளவுக்கு வளர்ச்சி பெற்றனர் என்பதை கூறுவார்கள்.

பீர் குடிக்கவா

பீர் குடிக்கவா

ஸ்பெயினுக்கு எதற்கு போகிறீர்கள்? இரண்டு பந்துகளை ஃபீல்டிங் செய்யவா? பீர் குடிக்கவா? அதற்கு பதிலாக ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் ஆடியிருக்க வேண்டும். நான் செமி பைனல் போட்டியை வர்ணனை செய்ய மும்பை செல்கிறேன். ஸ்டேடியமே அதிர்வதை பார்க்க உள்ளேன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kevin Pietersen slams ECB for not allowing Ben Stokes to stay for play-offs. Rising Pune Supergiant (RPS) defeated Kings XI Punjab (KXIP) in the must win game to get into the playoffs stage of the Indian Premier League (IPL) 2017.
Please Wait while comments are loading...