பெங்களூர் ரிட்டர்ன் கோஹ்லி அசத்தல் அரை சதம்.. மும்பைக்கு 143 ரன்கள் இலக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட் செய்து 142 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு கேப்டன் விராட் கோஹ்லி காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பி அரை சதம் விளாசி அசத்தியபோதிலும், மற்ற பேட்ஸ்மேன்களால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கோஹ்லி வருகை புது தாக்கத்தை உருவாக்கும் என நம்பினர் ரசிகர்கள். கடந்த போட்டியில் பெங்களூர் அணியால் கல்தா கொடுக்கப்பட்ட கிறிஸ் கெய்ல் இப்போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

IPL 2017: Match 12: Mumbai opt to bowl against Kohli-led Bangalore

சிறப்பாக ஆடிய கோஹ்லி 47 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அசத்தினார். கெய்ல் 27 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்சில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் விளாசினார் அவர். எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் 21 பந்துகளில் 19 ரன்கள்தான் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியினர் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பை தடுத்துவிட்டனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்ததாக 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி மும்பை அணி பேட் செய்கிறது.

அணி விவரம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோஹ்லி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், கேதர் ஜாதவ், மந்தீப் சிங், ஸ்டூவர்ட் பின்னி, பவன் நேகி, தைமல் மில்ஸ், ஸ்ரீநாத் அரவிந்த், சாமுவேல் பத்ரி, சஹல்.

மும்பை இந்தியன்ஸ்: பார்திவ் பட்டேல், ஜோஸ் பட்லர், ரோகித் ஷர்மா, நிதிஷ் ராணா, பொல்லார்ட், க்ருனால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, ஹர்பஜன்சிங், டிம் சவுத்தி, மிட்சேல் மெக்லென்கான், பும்ரா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mumbai Indians skipper Rohit Sharma won the toss and elected to bowl against Virat Kohli-led Royal Challengers Bangalore in match 12 of the Indian Premier League (IPL) 2017 here on Friday (April 14).
Please Wait while comments are loading...