ஒரே அமுக்கு.. இப்பத்தாய்யா இது "டோணி டீம்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி அட்டகாசமாக ஆடி அசத்தி விட்டது.

முதலில் பேட்டிங்கில் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டிய அந்த அணி, அடுத்து பவுலிங் மற்றும் பீல்டிங்கில் பிரித்து மேய்ந்து பெங்களூர் அணிக்கு ஷாக் கொடுத்தது.

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியின் முடிவைக் கண்டு பெங்களூரு ரசிகர்கள் அப்படியே உறைந்து போய் விட்டனர்.

நேற்றைய போட்டியின் முக்கிய சாராம்சங்கள்:

ஓப்பனிங் ஓகேப்பா..

ஓப்பனிங் ஓகேப்பா..

பெங்களூர் அணியின் ஓப்பனிங் நன்றாக இருந்தது. அதாவது பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டது. இதன் காரணமாக அபாயகரமான ஸ்கோரை புனே எடுப்பதிலிருந்து தடுத்து 20 ஓவர்களில் 161 ரன்கள் என்ற ஸ்கோரோடு நிறுத்தினர் பெங்களூர் வீரர்கள்.

ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா

ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா

ஆனால் பின்னர் பேட்டிங்கின்போது பெங்களூர் வீரர்கள் சொதப்பி விட்டனர். 162 என்ற இலக்கை எட்ட முடியாமல் திணறிப் போய் விட்டனர். முக்கி முக்கி ஆடி 20 ஓவர்களில் 134 ரன்களை மட்டுமே அவர்களால் சேர்க்க முடிந்தது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!

மறுபக்கம் புனே அணி பேட்டிங்கில் சற்று சொதப்பினாலும் கூட பவுலிங்கிலும், பீல்டிங்கிலும் பிரித்து விட்டது. ஒரு அணியாக அத்தனை பேரும் ஒருங்கிணைந்து ஆடி அசத்தி விட்டனர். ஒட்டுமொத்தமாக அவர்களது பவுலிங் அபாரமாக இருந்தது.

நாம் இருவர்!

நாம் இருவர்!

முன்னதாக புனே அணியின் பேட்டிங்கின்போது அஜிங்கியா ரஹானேவும், ராகுல் திரிபாதியும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து 63 ரன்களைக் குவித்துக் கொடுத்தனர். இது அந்த அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

தூக்கி அடிப்போம் பாத்துக்கோ

தூக்கி அடிப்போம் பாத்துக்கோ

இடையில் ஸ்டீவ் ஸ்மித்தும், டோணியும் இணைந்து பெங்களூர் பவுலிங்கை துவைத்து எடுத்தனர். இருவரும் ஆடிய விதத்தைப் பார்த்தபோது அடேங்கப்பா.. 200ஐத் தாண்டும் போலயே ஸ்கோர் என்றுதான் அனைவரும் நினைத்தனர். தனது பேட்டிங்கின்போது இமாலய சிக்ஸரைப் பறக்க விட்டு பந்து வீச்சாளர் சஹலை அதிர வைத்தார் டோணி.

நடுவுல கொஞ்சம் சொதப்புவோம் பாஸ்

நடுவுல கொஞ்சம் சொதப்புவோம் பாஸ்

அதேசமயம், டோணியும், அடுத்து ஸ்மித்தும் அவுட்டான பிறகு புனே வீரர்கள் சொதப்பினர். அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளைப் பறி கொடுத்து மோசமான நிலைக்கு போய் விட்டனர். இருப்பினும் மனீஷ் திவாரி ரூபத்தில் அவர்களுக்கு உயிர் கிடைத்தது.

இறங்கி அடிச்ச திவாரி

இறங்கி அடிச்ச திவாரி

கடைசி ஓவர்களில் திவாரி அசத்தி விட்டார். அதிரடியாக ஆடிய அவர் 11 பந்துகளில் 27 ரன்களைக் குவித்தார். பவர்பிளேயின் கடைசியில் புனே அணி 55 ரன்களைக் குவித்தது. அதிலும் 19வது ஓவரில் திவாரி 19 ரன்களைக் குவித்து பயமுறுத்தினார்.

ஆட்டம் கண்ட பெங்களூர்

ஆட்டம் கண்ட பெங்களூர்

பெங்களூர் அணியின் சேசிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மந்தீப் சிங் டக் அவுட் ஆனார். விராத் கோஹ்லி வேகமாக ஆடி அதே வேகத்தில் வீழ்ந்தார். 19 பந்துகளில் 29 ரன்கள் அவரது பங்கு. அபாயகரமான டிவில்லியர்ஸும் 30 பந்துகளில் 29 எடுத்து அவுட்டானார்.

நான் வீசினா தாங்க மாட்டே

நான் வீசினா தாங்க மாட்டே

பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ், பெங்களூர் அணியை நையப்புடைத்து விட்டார். 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார். இவர்தான் ஆட்ட நாயகனும் கூட.

வெறும் 5 சிக்ஸ்தானா!

வெறும் 5 சிக்ஸ்தானா!

பெங்களூர் அணி தனது இன்னிங்ஸில் சிக்ஸர் அடிக்கவே யோசித்தது. காரணம், பவுலிங் அப்படி. முக்கி முக்கி 5 சிக்ஸர்களை மட்டுமே பெங்களூர் அணி விளாசியது என்றால் பவுலிங்கின் உக்கிரத்தை சொல்ல வேண்டியதில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Some of the Highlights of the 17th match in the IPL 10 held between Royal Challengers Bangalore and Rising Pune Supergiant at Chinnaswamy stadium, Bengaluru.
Please Wait while comments are loading...