டெல்லியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா.. புள்ளிப் பட்டியலில் முதலிடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடந்த 18வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

IPL 2017: Match 18: Nathan Coulter-Nile restricts Delhi to 168/7 in 20 overs

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகீர்கான் பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணியில் நதீம் நீக்கப்பட்டு மொகமது ஷமி சேர்க்கப்பட்டார். கொல்கத்தா அணியில் ட்ரென்ட் போல்டிற்குப் பதிலாக நாதன் கவுல்டர்-நைல் களமிறக்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 25 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் நாதன் கூல்டர் நைல் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

169 ரன்களை விரட்டிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே படு மோசமாக அமைந்தது. தொடக்க வீரர்களான கெளதம் கம்பீர் 14, கிராண்டோமி 1, உத்தப்பா 4 ரன்கள் என வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர்.

இருப்பினும் சுதாரித்து விளையாடிய யூசுப் பதான் மற்றும் மணீஷ் பாண்டே ஜோடி சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து அதிரடியை காட்டி இருவரும் அரை சதம் கடந்தனர். யூசுப் பதான் 2 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 39 பந்தில் 59 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய மணீஷ் பாண்டே 48 பந்தில் 67 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் கொல்கத்தாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

யூசுப் பதான் அவுட்டான பின்பு வந்த சூர்யகுமார் யாதவ் 9, கிறிஸ் வோக்ஸ் 3 என அவுட்டாக போட்டியில் சுவாரஸ்யம் தொற்றியது. இருப்பினும் கடைசி ஓவரில் மணீஷ் பாண்டேவின் அதிரடி சிக்ஸர் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி முதல் இடத்தில் உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IPL 2017: Match 18: Nathan Coulter-Nile restricts Delhi to 168/7 in 20 overs
Please Wait while comments are loading...