கேப்டன் ரெய்னா அதிரடி.. கொல்கத்தாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐபிஎல் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாசில் வென்ற குஜராத் கேப்டன் ரெய்னா ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து கொல்கத்தா அணி பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

IPL 2017: Match 23: Faulkner plays as Gujarat elect to bowl against Kolkata

ராபின் உத்தப்பா 72, சுனில் நரைன் 42 (17 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்சர்), கேப்டன் கம்பீர் 33 ரன்கள் விளாசினர்.

188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்ச் 31 ரன்களில் வெளியேறிய நிலையில், பிரெண்டன் மெக்கல்லம் 27, கேப்டன் ரெய்னா 2 ரன்களுடன் களத்தில் நின்றிருந்தனர். மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்தது.

மெக்கல்லம் 33, தினேஷ் கார்த்திக் 3, இஷாந்த் கிஷன் 4, ட்வைன் ஸ்மித் 5 ரன்களில் வெளியேறினர். இருப்பினும் கேப்டன் ரெய்னா மறுமுனையில் அபாரமாக ஆடி 46 பந்துகளில், 84 ரன்களை குவித்ததால் குஜராத் அணி, 19வது ஓவரின் 2வது பந்திலேயே வெற்றி இலக்கை எட்டியது. ஜடேஜா 19 ரன்களுடனும், பால்க்னர் 4 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

முன்னதாக, குஜராத் அணியில் ஆன்ட்ரூ டை மற்றும், ஷிவில் கவுசிக் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் பிரவீன் குமார் அணியில் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Gujarat Lions (GL) skipper Suresh Raina won the toss and opted to bowl against Kolkata Knight Riders (KKR) in the league match in Indian Premier League (IPL) 2017 here on Friday (April 21).
Please Wait while comments are loading...