ஐபிஎல் ஆட்டத்தில் மழை பெய்தால் அதற்காக இப்படியா ரூல்ஸ் போடுவீர்கள்... கவாஸ்கர் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் மழை தொடர்பான ரூல்ஸ்களை மாற்ற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் 129 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

3 மணிநேரம் தாமதம்

3 மணிநேரம் தாமதம்

தொடா்ந்து 3 மணி நேரத்திற்கும் மேல் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12.55-க்கு ஆட்டம் துவங்கியது. தொடர் மழையால் ஆட்டத்தை 20 ஓவா்கள் முழுவதுமாக நடத்த இயலாத சூழல் உள்ளதாக நடுவர்கள் கூறினர். இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஐபிஎல் விதிமுறைப்படி, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

தகுதி சுற்று

தகுதி சுற்று

இந்த ஆட்டத்தில் வெற்றிதன் மூலம் பெங்களூரில் 19ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது கொல்கத்தா. அதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

கவாஸ்கர் அதிருப்தி

கவாஸ்கர் அதிருப்தி

மழை காரணமாக செயல்படுத்தப்பட்ட விதிமுறை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். இது சரியல்ல என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விடியற்காலம் வரை என்ன வேலை

விடியற்காலம் வரை என்ன வேலை

போட்டி முடிவடைய அதிகாலை 1.20 மணியாகிவிட்டது. இதை குறிப்பிட்டுள்ள கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும், அதிகாலை வரை ரசிகர்களை மைதானத்திலேயே அமர வைத்திருந்தது சரியான நடவடிக்கை இல்லை என கூறியுள்ளார்.

வீரர்களும் பாவம்

வீரர்களும் பாவம்

இரு அணி வீரர்களின் பக்கம் இருந்து பார்க்கும்போதும், இது சரியான நடவடிக்கை இல்லை. 8 மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது என்றால், ஹோட்டல்களில் இருந்து வீரர்கள் மாலை 5 மணிக்கே மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களையும் காத்திருக்க வைத்துவிட்டனர் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

விதிமுறை மாற்றம்

விதிமுறை மாற்றம்

ஐபிஎல் நிர்வாகம், மழை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்க வேண்டும். 10 வருடங்கள் ஐபிஎல் தொடர் நடந்துள்ள நிலையில், இனிவரும் சீசன்களில் இப்போதுள்ள மழை சார்ந்த விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

ரூல்ஸ் போடுங்க

ரூல்ஸ் போடுங்க

விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்து விதிமுறைகளை அமைக்க ஐபிஎல் நிர்வாகம் ஒரு கமிட்டியை அமைக்கலாம். இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former India captain and batting legend Sunil Gavaskar has called for change of Indian Premier League (IPL) playing conditions which he termed as "unfair".
Please Wait while comments are loading...