சூப்பர் சுனில்.. நச்சுன்னு கலக்கிட்டீங்களே நரீன்.. செம குஷியில் கம்பீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று சகலகலாவல்லவனாக மாறி கலக்கி விட்டது. அதில் முக்கிய ஹைலைட்டே சூப்பர் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரீன் ஆட்டம்தான்.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் எந்தப் பக்கமும் திரும்ப முடியாமல் திணறிப் போய் விட்டது. கிட்டத்தட்ட நாலாபக்கமும் பஞ்சாபை வளைத்து கலகலக்க வைத்து விட்டார் கொல்கத்தா கேப்டன் கம்பீர்.

சுனில் நரீன் பந்து வீச்சிலும், பின்னர் பேட்டிங்கிலும் கலக்கி விட்டார். அதை விட செம சுவாரஸ்யம், அவர் நேற்று தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அசத்தியதுதான்.

 செம செம்... கம்பீர் பாராட்டு

செம செம்... கம்பீர் பாராட்டு

சுனில் நரீனின் ஆட்டம் குறித்து கேப்டன் கம்பீர் வாய் விட்டுப் பாராட்டியுள்ளார். நான் சரியான நேரத்தில் அவரை நம்பினேன். அவரும் அதை சரியாக செயல்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார் கம்பீர்.

மேன் ஆப் தி மேட்ச்

மேன் ஆப் தி மேட்ச்

நேற்றைய ஆட்டத்தில் சுனில் நரீன்தான் மேன் ஆப் தி மேட்ச். தொடக்க ஆட்டக்காரராக இறங்கி 18 பந்துகளில் 37 ரன்களை நொறுக்கி அனைவரையும் அதிர வைத்து விட்டார் நரீன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஆரம்பித்து வைத்த அதிரடியை பின்னர் வந்த ராபின் உத்தப்பா, கம்பீர் ஆகியோர் தொடரவே கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பேட்டிங்கில் நம்பிக்கை

பேட்டிங்கில் நம்பிக்கை

இதுகுறித்து கம்பீர் கூறுகையில் நான் இப்போது நரீனின் பேட்டிங் மீதும் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளேன். அது நல்ல பலனையும் கொடுத்துள்ளது. அவர் ஒரு அருமையான பந்து வீச்சாளர். தற்போது பேட்ஸ்மேனாகவும் ஜொலித்துள்ளார் என்றார் கம்பீர்.

பந்து வீச்சிலும் அசத்தல்

பந்து வீச்சிலும் அசத்தல்

நரீன் பந்து வீச்சிலும் அசத்தி விட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர் 19 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் நரீன். இதனால் பஞ்சாப் அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போய் விட்டது. இல்லாவிட்டால் 200 ரன்களுக்கு மேல் கொளுத்தியிருப்பார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kolkata Knight Riders (KKR) captain Gautam Gambhir on Thursday (April 13) effusively praised Sunil Narine, saying it was time he trusted the Caribbean as a willower who was also the leader of the attack with the leather.
Please Wait while comments are loading...