பொறுப்பில்லாதவங்க.. வெளிநாட்டு வீரர்களை வறுத்தெடுத்த சேவாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மொகாலி: ரைசிங் புனே அணிக்கு எதிரான லீக் போட்டியின் தோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே காரணம், என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் செயல்பாட்டு இயக்குநர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

புனேவில் நடந்த 55வது லீக் போட்டியில், பஞ்சாப், புனே அணிகள் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி வெறும் 73 ரன்களில் ஆல்அவுட்டானது.

இதனால் தொடரில் இருந்து வெளியேறியது அந்த அணி. ஆனால், டோணி இடம் பிடித்துள்ள ஸ்மித் தலைமையிலான புனே அணி, புள்ளி பட்டியலில், 2வது இடத்துக்கு முன்னேறியது.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்களான கப்தில், மேக்ஸ்வெல், மார்ஷ், மோர்கன் ஆகிய வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் கூட களத்தில் நிலைத்து நின்று ஆடவில்லை.

20 பந்துக்கும் தகுதியில்லையா

20 பந்துக்கும் தகுதியில்லையா

இன்னொரு கொடுமை என்னவென்றால், எந்த ஒரு பஞ்சாப் அணி வீரரும் அதிகபட்சமாக 20 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. இந்த படுதோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே பொறுப்பேற்க வேண்டும் என அந்த அணியின் செயல்பாட்டு இயக்குநர் சேவாக் தெரிவித்துள்ளார்.

பொறுப்பில்லையே

பொறுப்பில்லையே

இதுகுறித்து சேவாக் கூறுகையில், "ஒரு வெளிநாட்டு வீரர் கூட முதல் 15 ஓவர்கள் வரை நிலைக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்கவில்லை. அதற்கான பொறுப்பு அவர்களுடையது தான்" என கூறியுள்ளார் சேவாக்.

தவறு இங்கேதான்

தவறு இங்கேதான்

கப்தில் முதல் பந்தில் அவுட்டானது அவருடைய தவறு இல்லை. அதன்பின் வரிசையாக சென்ற வீரர்கள் வேகமாக பெவிலியன் திரும்பியதே மிகப்பெரிய தவறு. இப்படி பொறுப்பில்லாத காரணத்தால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kings XI Punjab's cricket operations director Virender Sehwag came out all guns blazing against skipper Glenn Maxwell and foreign players for team's ouster from the Indian Premier League (IPL) 2017.
Please Wait while comments are loading...