மீண்டும் சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் ஏலம்: பென் ஸ்டோக்ஸுக்கு போட்டா போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: 2017ம் ஆண்டுக்கான ஐபிஎல் அணி வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் வரும் 20ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.

2017ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் வரும் 20ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 351 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் 226 பேர் இந்தியர்கள்.

IPL auction on Feb. 20th: All eyes on Ben Stokes

8 அணிகள் ரூ.143 கோடி செலு செய்து வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 13 வீரர்களின் கான்ட்ராக்ட் கடந்த சீசனோடு முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி அதிகம் செலவு செய்து வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏலத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வீரர்களும் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் தான் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்த ஆண்டு தான் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IPL 2017 auction will be held in Bengaluru on february 20th. England's Ben Stokes is expected to get the highest price.
Please Wait while comments are loading...