ஐபிஎல் ஹீரோ சென்னை சூப்பர் கிங்ஸ்.. 10வது பிறந்த நாளை பந்தாவாக கொண்டாடிய நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவுக்கு இப்போது வயது 10. இந்த தொடரில் சென்னை ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சென்னை சூப்பர் கிங்ஸ்தான் ஹீரோ அணியாக இருந்தது.

பேஸ்புக் ரசிகர்கள் மேப்பை வைத்து பார்த்தாலே இதை புரிந்து கொள்ள முடியும். சிஎஸ்கே அணிக்கு டோணி கேப்டன் என்றதுமே தொற்றிக்கொண்டது அந்த ஆரவாரம்.

அதிலும் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே 240 ரன்களை குவித்து தனது வருகையை கம்பீரமாக பறைசாற்றியது. 56 பந்துகளில் மைக்கேல் ஹஸ்சி 116 ரன்கள் குவித்து களத்தில் நின்று மிரட்டினார். இப்போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.

சிஎஸ்கே அணி போட்டியிட்ட 8 போட்டிகளில், 5ல் பைனல் வரை சென்றுள்ளது. எட்டிலுமே பிளேஆப் சென்றுள்ளது. 2 முறை சாம்பியன் ஆகியுள்ளது. இப்படிப்பட்ட சிஎஸ்கே அணியை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். 10வது வருட கொண்டாட்டத்தின்போது இதை #10SuperYearsOfCSK என டிவிட் போட்டு வெளிப்படுத்தினர் ரசிகர்கள்.

டோணிக்காக

கேப்டன் டோணியை சிலாகித்து சிஎஸ்கே வெற்றியை அர்ப்பணிக்கிறது இந்த டிவிட்

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ள கொண்டாட்ட டிவிட் இது.

அன்பு மாறாது

சென்னை அணி மீதான அன்பு என்றும் மாறாது என்பதை பறை சாற்றுகிறது இந்த டிவிட்.

சாம்பியன்கள் பிறப்பதில்லை

சாம்பியன்கள் பிறப்பதில்லை, உருவாகுகிறார்கள் என்று கூறுவார்கள், அதை மெய்ப்பிக்கிறது இந்த டிவிட்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
It has been exactly 10 years that Chennai Super Kings (CSK) played their first ever match in IPL 2008 against Kings XI Punjab in Mohali. As the Chennai-based franchise complete 10 years in IPL, fans flocked twitter to wish and celebrate the '10 super years of CSK'.
Please Wait while comments are loading...