ஐபிஎல்லுக்கு வயது 10.. மறக்க முடியுமா இந்த 10ம் நம்பர் ஜெர்சி சாம்பியனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் 2008ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பத்தாண்டு காலத்தில் பல்வேறு மறக்க முடியாத சம்பவங்களை சந்தித்துள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்த கவுரவமும் மறக்க முடியாதது. இந்திய அணிக்காக சச்சின் 1ம் எண் கொண்ட ஜெர்சி அணிந்து வந்தார்.

2008 முதல் 2013வரை ஐபிஎல் தொடரில் மும்பைக்காக ஆடிய சச்சின் அத்தோடு ஓய்வு முடிவை அறிவித்தார். அதற்குள்ளாக 2000 ரன்களை அவர் சேகரித்தார்.

சச்சின் ஓய்வு

சச்சின் ஓய்வு

2013ல்தான் சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். இதையொட்டி 2012ல் #RetireTheJerseyNo10 என்ற பெயரில் ஹேஷ்டேக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தை நடத்தியது. இந்த ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் டிவிட் செய்யுமாறு மும்பை இந்தியன்ஸ் கேட்டுக்கொண்டது.

இரண்டு சாதனைகள்

இரண்டு சாதனைகள்

ஐபிஎல் தொடரை வெல்வது மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளை வெல்வது ஆகிய இரண்டும் இதே ஆண்டில் நடந்தது. இது ஒரு பெரும் சாதனை. எங்களுக்கு உணர்வுபூர்வமானது என்று தெரிவித்திருந்தார் மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் நீத்தா அம்பானி.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

டெண்டுல்கர் 2008 முதல் 2013வரை 6 ஐபிஎல் தொடர்களில் ஆடியுள்ளார். 2010ம் ஆண்டு சீசனில் சச்சின் மொத்தம் 618 ரன்களை குவித்து, ஆரஞ்சு வண்ண தொப்பிக்கு சொந்தக்காரரானார். டி20 தொடரிலும் தன்னால் தொடர் நாயகன் பட்டம் வெல்ல முடியும் என்பதை சச்சின் நிரூபித்த தருணம்.

மறக்க முடியாது

மறக்க முடியாது

2013 ஐபிஎல் பைனலில், டெல்லி பெரோசா கோட்லாவில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. தனது கடைசி ஐபிஎல் போட்டியான அதில், சச்சின் 15 ரன்கள் எடுத்தார். இதில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் 10ம் ஆண்டை தொட்டுள்ள நிலையில், மும்பை இந்தியன்சுக்காக சச்சின் 10ம் நம்பர் ஜெர்சி அணிந்து ஆடியது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As the Indian Premier League (IPL) is in its 10th edition this year, some of the moments in the cash-rich Twenty20 tournament are unforgettable. And Mumbai Indians' (MI) great gesture in 2013 has been first in cricket world and special.
Please Wait while comments are loading...