டோணி செய்தது சாதனை இல்லையா? இர்பான் பதானுக்கு ஏன் இந்த கோபம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரைசிங் புனே சூப்பர் ஜையான்ட் அணி ஐபிஎல் பைனலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், அதற்கான புகழை ஒரு நபருக்கு கொடுத்துள்ளார்.

அந்த நபர் புனே அணியின் முதுகெலும்பாக திகழும் டோணி அல்ல என்பதுதான் சர்ச்சைக்கு காரணம்.

இந்தியாவின் வாசிம் அக்ரம் என ஒரு கட்டத்தில் புகழப்பெற்றவர் இர்பான் பதான். இன்ஸ்விங், அவுட்ஸ்விங் மட்டுமல்லாது, அக்ரமை போலவே இன் ஸ்விங்கிங் யார்க்கர் வீசுவதில் கில்லாடி.

சிறந்த பவுலர்

சிறந்த பவுலர்

ஒருமுறை, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அந்த அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை கண்களில் விரலை விட்டு ஆட்டியது இவரது பந்து வீச்சு. காயம் காரணமாக சில காலம் ஓய்வெடுத்து பிறகு அணிக்கு திரும்பிய பிறகு ஸ்விங் மிஸ் ஆகிவிட்டது. அதை மீட்டெடுக்க அவரால் முடியவில்லை. பந்து வீச்சின் வேகமும் மணிக்கு 140 கி.மீ என்ற சராசரி அளவில் இருந்து, வெறும் 125 என்ற அளவிக்கு குறைந்துவிட்டது.

டோணி மீது கோபம்

டோணி மீது கோபம்

இர்பான் பதான் பேட்டிங்கும் செய்ய கூடியவர் என்றபோதிலும், பந்து வீச்சில் சோடை போனதால் அவரால் அணியில் நீடிக்க முடியவில்லை. ஆனால் தன்னை அணியில் சேர்க்காததற்கு அப்போதைய கேப்டன் டோணிதான் காரணம் என்று அதிருப்தியில் இருந்தார் இர்பான் பதான்.

டோணி சாதனை

டோணி சாதனை

தற்போது அந்த அதிருப்தியை வெளிப்படையாகவே காட்டியுள்ளார். புனே அணி பைனலுக்கு சென்றுள்ள நிலையில், அணி வீரரான டோணி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது 7வது முறையாக பைனலுக்குள் செல்லும் ஒரே வீரர் அவர்தான்.

ரசிகர்கள் புகழ்ச்சி

ரசிகர்கள் புகழ்ச்சி

முன்னதாக ஆறு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் பைனலுக்குள் காலடி எடுத்து வைத்தார். இதனால் டோணியை ரசிகர்கள் வானளாவ புகழ்ந்து வருகின்றனர். ஆனால் இர்பான் அதை அப்படியே வேறு ஒருவருக்கு அர்ப்பணம் செய்துவிட்டார்.

பிளம்மிங்தான் காரணமாம்

இர்பான் தனது டிடவிட்டில், புனே அணி கேப்டன் ஸ்டீபன் பிளமிங்கை குறிப்பிட்டு, அவர் மற்றொரு பைனலுக்குள் செல்வதாகவும், அணியை சிறப்பாக கையாண்டு பெரிய வெற்றிகளை ஈட்டித் தருவதாகவும் புகழ்ந்துள்ளார்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

ஏனெனில் சிஎஸ்கே அணி பயிற்சியாளராகவும் ஸ்டீபன் பிளமிங் பதவி வகித்தவர். எனவே டோணிக்கு ஈடாக அவரை வைத்து இர்பான் கூறியுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த பிளெமிங் சிறந்த பேட்ஸ்மேன் என பெயர் எடுத்தவர். இப்போது பயிற்சியிலும் கலக்கி வருகிறார். ஆனால் அவர் என்னதான் பயிற்சியளித்தாலும் களத்தில் ஆட வேண்டியது வீரர்களே. அதை டோணி செய்கிறார். மேலும், களத்தில்திடீரென வியூகங்களை மாற்ற வேண்டியதும் சீனியர் வீரர்களே. கேப்டன் ஸ்மித்துக்கு இப்படி பல வியூகங்களை அமைத்துக் கொடுப்பது டோணி. இதை ஸ்மித்தும் ஒப்புக்கொண்டுள்ளார். டோணி பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இர்பான் பதான் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
It's no fluke 4 Fleming to enjoy another final. Its the way he handles the team which helps them achieve great heights, congrats coach, says Irfan Pathan, with out mention Dhoni.
Please Wait while comments are loading...