கும்ப்ளே - கோஹ்லி மோதல்.. இந்திய அணியின் கவனத்தை குழப்பி விட்டதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய அணியின் பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவுக்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் இடையேயான மோதல் போக்கே இறுதிப் போட்டியில் இந்தியா பெரும் குழப்பத்தை சந்திக்க நேர்ந்ததா என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.

இன்று நடந்த போட்டியில் இந்தியர்கள் எதிர்பார்த்தது போல நமது வீரர்கள் நடந்து கொள்ளவில்லை. மாறாக மொத்தமாக சொதப்பி விட்டனர். இதுதான் பலரயைும் கேள்வி கேட்க வைத்துள்ளது.

கும்ப்ளே அட்வைஸை கோஹ்லி கேட்கலையா அல்லது கோஹ்லிக்கு கும்ப்ளே அட்வைஸ் தரவில்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் பீல்டிங்கைத் தேர்வு செய்தது முதல் பெரிய குழப்பம். யார் அவரை பீல்டிங்கைத் தேர்வு செய்யச் சொன்னது என்று தெரியவில்லை. நிச்சயம் கும்ப்ளே இந்த யோசனையைத் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை.

338 ரன்கள்

338 ரன்கள்

இந்தியாவின் சொதப்பல் பந்து வீச்சைப் பயன்படுத்தி பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை அடித்தது. இதைத் தொடர்ந்து 339 இலக்குகளுடன் களமிறங்கிய இந்திய அணி 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பீல்டிங் மிகத் தவறு

பீல்டிங் மிகத் தவறு

டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்திருக்க வேண்டும். சரி ஏதோ தவறான முடிவு எடுத்து விட்டது. சரி, பீல்டிங்காவது ஒழுங்காக செய்தார்களா என்றால் இல்லை. எத்தனை நோ பால்கள், வைட் பால்கள்.. !

கோஹ்லி - கும்ப்ளே கலாட்டா

கோஹ்லி - கும்ப்ளே கலாட்டா

இத்தொடரின் ஆரம்பத்திலேயே கோஹ்லி, கும்ப்ளே மோதல் தொடங்க விட்டது. கும்ப்ளே பேச்சை, ஆலோசனையை கோஹ்லி கேட்பதில்லை என்றும் பேச்சு அடிபட்டது. அது உண்மையாக இருக்குமோ என்று இன்று நடந்த சம்பவங்கள் யோசிக்க வைத்து விட்டன.

பழம் நழுவி

பழம் நழுவி

பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயிலும் விழுந்தது போல் டாஸில் வெற்றி பெற்றாலும் பாகிஸ்தானே பேட்டிங் செய்து, அது வெல்லவும் ஈஸியாக விட்டு விட்டது இந்தியா.

ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amidst the clash between Kohli and Kumble, India have lost the finals against Pakistan.
Please Wait while comments are loading...