ஜெயிச்சது கோஹ்லிதான்.. ஆனால் முக்கியமான கட்டத்துல சூப்பர் ஐடியா கொடுத்தது தல டோணியாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிர்மிங்காம்: வங்கதேசத்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் இந்தியா படு சூப்பராக வெற்றி பெற்றதற்கு இந்தியாவின் அபாரமான பேட்டிங் முக்கியக் காரணம் என்றால், கேதார் ஜாதவின் சிறப்பான பந்து வீச்சு இன்னொரு முக்கியக் காரணமாகும்.

வங்கதேச வீரர்களை வீழ்த்த இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது கேதார் ஜாதவை அறிமுகப்படுத்தினார் கேப்டன் கோஹ்லி. அதற்கு கை மேல் நல்ல பலன் கிடைத்தது. வங்கதேசத்தின் வேகத்தை முடக்கி அவர்களை நிலை குலையச் செய்தது இந்தியப் பந்து வீச்சு.

இந்த நிலையில் கேதார் ஜாதவை அறிமுகப்படுத்தும் ஐடியாவை கோஹ்லிக்குக் கொடுத்ததே முன்னாள் கேப்டன் டோணிதான் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

28 ஓவர் வரை வங்கதேசம் அசத்தல்

28 ஓவர் வரை வங்கதேசம் அசத்தல்

தனது பேட்டிங்கின்போது 28 ஓவர்கள் வரையிலும் வங்கதேசம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அதன் பிறகுதான் கேதார் ஜாதவ் மூலமாக இந்தியாவுக்குப் பெரிய பிரேக் கிடைத்தது.

சூதாட்டம் மாதிரி

சூதாட்டம் மாதிரி

வங்கதேச வீரர்கள் அப்போது அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஜாதவை கொண்டு வருவது என்பது கிட்டத்தட்ட சூதாட்டம் போலத்தான். இருந்தாலும் துணிந்து அந்த முடிவை எடுத்தார் கோஹ்லி.

செம பலன்

செம பலன்

ஆனால் நினைத்ததை விடவும் சிறப்பான பலனைக் கொடுத்தது கோஹ்லியின் முடிவு. வங்கதேசத்தின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. ஜாதவ் வீசிய ஸ்லோ பால்களை அடிக்க முடியாமல் திணறி ஆட்டமிழந்தனர் வங்கதேச வீரர்கள்.

டோணிதான் காரணம்

டோணிதான் காரணம்

உண்மையில் கோஹ்லிக்கு, ஜாதவை இறக்கும் ஐடியாவைக் கொடுத்ததே டோணிதானாம். இதை கோஹ்லியே போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டோணியும், தானும் சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறினார் கோஹ்லி.

டோணிக்கும் பங்குண்டு

டோணிக்கும் பங்குண்டு

இதுகுறித்து கோஹ்லி கூறுகையில் ஜாதவை கொண்டு வரும் முடிவுக்கு நான் மட்டும் காரணமல்ல, டோணியும்தான். ஜாதவை இறக்கலாம் என்ற முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்தோம். உண்மையில் ஜாதவும் சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு நன்றி என்றார் கோஹ்லி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Captain Kohli has said that he and Dhoni took the decision jointly to bring in Jadav to bowl against Bangladesh in yesterday's match.
Please Wait while comments are loading...