ஆட்டோ ஓட்டிதான் வாழ்க்கை நடத்தும் இந்திய கிரிக்கெட் வீரரின் தாத்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய இளம் வீரர் பும்ராவின் தாத்தா ஆட்டோ ஓட்டிதான் வாழ்க்கை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது.

இளம் இந்திய வீரர் ஜஸ்ப்ரிட் பும்ரா கிரிக்கெட்டில், உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். 23 வயதான வேகப்பந்து வீரரான அவரது லைன்-லென்த் மற்றும் துல்லியமான யார்க்கர்கள் அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்து வருகின்றன.

டி20 கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி., தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும், ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் செயல்திறனை அதிகரித்து வருகிறார்.

ஆட்டோ ரிக்ஷா

ஆட்டோ ரிக்ஷா

குஜராத்தை சேர்ந்த பும்ரா வெற்றிகரமாக செயல்படும் நேரத்தில், அவரது தாத்தாவோ உத்தரகண்ட், உத்தம் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டுவதன் மூலம் தனது வாழ்வை நடத்த சம்பாதித்து வருகிறார்.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

அகமதாபாத்தில் சந்தோக் சிங்கிற்கு 3 தொழிற்சாலைகள் இருந்துள்ளன. ஆனால், அவரது மகனும், பும்ராவின் தந்தையுமான ஜஸ்வீர் சிங் பும்ரா மரணமடைந்ததால் நிலைமை மாறிவிட்டதாம்.

இடம் பெயர்ந்தார்

இடம் பெயர்ந்தார்

இதன்பிறகு சந்தோக் சிங்கிற்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொழிற்சாலைகளை விற்பனை செய்துவிட்டு, சந்தோக் சிங் உத்தம் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.

விற்பனை

விற்பனை

உத்தம் நகரில் 2006ம் ஆண்டு சென்ற சந்தோக் 4 ஆட்டோக்களை வாங்கியுள்ளார். அதை வைத்து மீண்டும் முன்னேறலாம் என நினைத்துள்ளார். ஆனால் அந்த தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால், ஆட்டோ ரிக்ஷாக்களில் மூன்றை விற்பனை செய்துவிட்டார். எஞ்சிய ஒரு ஆட்டோவை சந்தோக் ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At a time when the Gujarat pacer is achieving success, his octogenarian grandfather is earning his living by driving an auto-rickshaw in Uddham Singh Nagar, Uttarakhand. As per an Indian Express report, Santok Singh Bumrah is driving a tempo here ever since he moved to the town from Ahmedabad in Gujarat.
Please Wait while comments are loading...