For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய சாதனை நாயகன் கும்ப்ளே

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து, விராத் கோஹ்லியால் ராஜினாமா செய்த அனில் கும்ப்ளே இந்திய அணிக்கு வெற்றி மேல் வெற்றிகளை குவித்துள்ளார்.

By Lakshmi Priya

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜினாமா செய்த அனில் கும்ப்ளே தன்னுடைய அபார திறமை மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி முன்னாள் ஆட்டக்காரர் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். 46 வயதான அவரது பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் ஜூன் 23-இல் தொடங்கவுள்ள மேற்கு இந்திய தீவுகளுடனான விளையாட்டு முடியும் வரை கும்ப்ளேவே பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் பிசிசிஐ தெரிவித்தது.

அங்கு மேற்கு இந்திய தீவுகளை எதிர்த்து 5 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும், டி 20 போட்டிகளையும் ஆட உள்ளது. எனினும் அவர் பயிற்சியாளராக தொடர கேப்டன் விராத் கோஹ்லிக்கு விரும்பவில்லை. இதனால் கும்ப்ளே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அனில் கும்ப்ளேவின் சாதனைகள்

அனில் கும்ப்ளேவின் சாதனைகள்

கடந்த ஒரு ஆண்டில் இந்திய அணிக்கு அனில் கும்ப்ளேவின் சாதனைகள் ஏராளம் என்பதை கோஹ்லியாலும் மறுக்க முடியாது. அவர் பயிற்சியின் கீழ் இந்தியா எதிர்கொண்ட போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்தியா 17 டெஸ்ட் போட்டிகளில் 12-லும், 13 சர்வதேச ஒரு நாள் போட்டியில் 8-லும், டி20 4 போட்டிகளில் 2-லும் கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் வெற்றி பெற்றுள்ளது.

முதலிலேயே வெற்றிதான்

முதலிலேயே வெற்றிதான்

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. அந்நாட்டு வீரர்களை இந்திய அணி அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக விளையாடி விஞ்சியது.

நியூஸிலாந்து போட்டியிலும்

நியூஸிலாந்து போட்டியிலும்

நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளில் இந்திய அணி வென்று ஐசிசி தர வரிசை பட்டியலில் முன்னிலை இடத்தை பிடித்தது. கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்நாட்டு வீரர்களை காட்டிலு்ம இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.

ஒரு நாள் போட்டியிலும்

ஒரு நாள் போட்டியிலும்

நியூசிலாந்துக்கு எதிராக 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன.அதில் இந்தியா 3 போட்டிகளிலும், நியுஸிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கண்டுபிடித்த விளையாட்டு கிரிக்கெட் ஆகும். அந்த அணியினருடன் அவர்கள் சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்தியா வெற்றி பெற்றது.

வங்கதேசத்துக்கு எதிராக

வங்கதேசத்துக்கு எதிராக

இந்தியா வங்கதேசம் அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடியது. அவர்களின் நிலையும் நியுஸிலாந்து, இங்கிலாந்திலிருந்து வேறுபடவில்லை. விராத் கோஹ்லியும் மற்ற வீரர்களும் வங்கதேசத்தை வெற்றிக் கண்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

இந்திய பயிற்சியாளராக அனில் கும்ப்ளே ஆஸ்திரேலிய அணியுடன் மிகவும் கடினமான சவாலை எதிர்கொண்டார். இநதியாவின் அபார ஆட்டத்தை பார்த்து ஆஸ்திரேலியன் பயிற்சியாளர் டாரன் லெமன் அதிர்ச்சி அடைந்தார். பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது. ராஞ்சி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. தர்மசாலாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லி இல்லாவிட்டாலும் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதற்கு அனில் கும்ப்ளேவின் பயிற்சிதான் காரணம்.

சாம்பியன் டிராபி 2017

சாம்பியன் டிராபி 2017

லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியில் அரையிறுதி போட்டிவரை வெற்றி பெற்றது. பின்னர் பாகிஸ்தானுடன் இறுதி போட்டியில் களம் இறங்கியது. எனினும் பாகிஸ்தானின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றியை இழந்தது. இதன் பிறகு விராத் கோஹ்லிக்கு தன்னை பிடிக்காததால் தான் ராஜினாமா செய்வதாக அனில் கும்ப்ளே கூறியதாக தெரிகிறது. இதுவே இவர் பயிற்சியிலான கடைசி ஆட்டமாகும்.

Story first published: Wednesday, June 21, 2017, 16:09 [IST]
Other articles published on Jun 21, 2017
English summary
India won 12 off 17 Tests, 8 off 13 ODIs and 2 off 4 T20Is played under Anil Kumble.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X