For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கைக்கு எதிரான போட்டி- ஒரு இன்னிங்ஸ், 53 ரன்களில் இந்தியா அபார வெற்றி- டெஸ்ட் தொடர் வசமானது!

கொழும்பில் நடைபெற்ற இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்களில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

By Devarajan

கொழும்பு: இலங்கையுடனான 2 வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்களில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள கிளப் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங்கில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது. இதில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் சதமடித்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளமிட்டனர்.

183 ரன்களில் ஆல் அவுட்

183 ரன்களில் ஆல் அவுட்

இதையடுத்து, இலங்கை அணி பேட்டிங்கில் இறங்கியது. இந்திய அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்இதையடுத்து, இலங்கை அணி பேட்டிங்கில் இறங்கியது. இந்திய அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளி இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். டுகளையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளி இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

பாலோ- ஆன்

பாலோ- ஆன்

இலங்கை அணி இந்தியாவை விட முதல் இன்னிங்சில் 439 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.

கருணாரத்னே- மெண்டிஸ் ஜோடி

கருணாரத்னே- மெண்டிஸ் ஜோடி

தொடக்க வீரர்களாக உபுல் தரங்காவும், கருணாரத்னேவும் களம் இறங்கினர். உபுல் தரங்கா விரைவில் ஆட்டம் இழந்தார். அதன்பின், கருணாரத்னே- குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

209 ரன்கள்

209 ரன்கள்

சிறப்பாக விளையாடி சதம் அடித்த மெண்டிஸ், 110 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட்யா பந்தில் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 3-ஆவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்திருந்தது.

கருணாரத்னே சதம்

கருணாரத்னே சதம்

இந்நிலையில், 4-ஆவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய கருணாரத்னே சதமடித்தார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தார். ஆனால், புஷ்பகுமாரா அஸ்வின் பந்துவீச்சில், திடீரென போல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சண்டிமாலை, ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கினார்.

அபார வெற்றி

அபார வெற்றி

அதன்பின்னர், கருணாரத்னேவுடன் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இலங்கை அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 136 ரன்களுடனும், மேத்யூஸ் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆனால், ஆட்டத்தின் இறுதியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்த தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

Story first published: Sunday, August 6, 2017, 15:30 [IST]
Other articles published on Aug 6, 2017
English summary
India vs Sri Lanka Test: Karunaratne scores century and the islanders struggling to overcome follow on.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X