"பாஜக" ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் ஆயுள் தடையை விலக்க கேரள ஹைகோர்ட் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பாஜக கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கி ஆயுள் தடை விதிக்கப்பட்டவர் ஸ்ரீசாந்த். இதன் மூலம் இவரது கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனம் ஆனது. சமீபத்தில்தான் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ஸ்ரீசாந்த். இந்த நிலையில் அவர் மீதான தடை நீங்கியுள்ளது.

முன்னதாக தன் மீதான தடையை நீக்கக் கோரி கேரள ஹைகோர்ட்டில் மனு செய்திருந்தார் ஸ்ரீசாந்த் அதை ஏற்ற கேரள ஹைகோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டது.

2015ல் டெல்லி கோர்ட் உத்தரவு

2015ல் டெல்லி கோர்ட் உத்தரவு

கடந்த 2015ம் ஆண்டே ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பிசிசிஐ இதற்கான நடவடிக்கையில் ஈடுபடில்லை. இந்த நிலையில் தற்போது கேரள ஹைகோர்ட் இத்தடையை நீக்க உத்தரவிட்டுள்ளது

2013ல் தடை.

2013ல் தடை.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சிக்கியவர் ,ஸ்ரீசாந்த். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.

2 ஆண்டு தடை விதிப்பு

2 ஆண்டு தடை விதிப்பு

இதையடுத்துதான் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த இரு அணிகளும் தடை நீங்கி அடுத்த ஆண்டு விளையாடவுள்ளன.

நிர்மூலமானது

நிர்மூலமானது

தற்போது ஸ்ரீசாந்த்தின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட நிர்மூலமாகி விட்டது. எனவே இந்தத் தடை நீக்கத்தால் எந்த அளவுக்கு அவருக்குப் பயன் இருக்கும் என்று தெரியவில்லை. அவர் இனி புதுத் தெம்புடன் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kerala HC today ordered to lift ban on former cricketer Sreesanth which was imposed in 2013.
Please Wait while comments are loading...