பத்து வருடம் கழித்து பழிவாங்கிய பாகிஸ்தான்.. டோணி நிகழ்த்திய மேஜிக்கை செய்ய தவறிய கோஹ்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: 2007ம் ஆண்டு ஐசிசி டி20 பைனலில் கேப்டன் என்ற வகையில், டோணி செய்த மேஜிக்கை, 10 வருடம் கழித்து இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி பைனலில் செய்ய தவறிவிட்டார் கோஹ்லி.

அது முதல் டி20 உலக கோப்பை தொடர். அதன் பைனலில் இந்தியா-பாகிஸ்தான் மோதல். மொத்த உலகமும் உற்று பார்த்தது. முதலில் பேட் செய்த இந்தியா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் குவிக்கவில்லை.

20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள்தான் எடுத்திருந்தது இந்தியா. 120 பந்துகளில் 158 ரன்கள் என்ற ஓரளவுக்கு எளிய இலக்கோடுதான் களமிறங்கியது பாகிஸ்தான்.

டோணி வியூகங்கள்

டோணி வியூகங்கள்

ஆனால், இந்திய கேப்டன் டோணி, பாகிஸ்தானுக்கான பாதையை எளிதாக்கவில்லை. கற்றுக்கொண்ட வித்தைகள் அத்தனையையும் இறக்கினார் டோணி. கைக்கு எட்டும் தூரத்தில் ஸ்கோர் இருந்தபோதும், களத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான மிஸ்பா உல்ஹக் நின்றபோதிலும், கலங்கவில்லை டோணி. வியூகத்தை மாற்றினார். புதுமுகம் ஜோகிந்தர் ஷர்மாவை பந்துவீச அழைத்தார்.

அபார வெற்றி

அபார வெற்றி

ரசிகர்களுக்கு மட்டுமல்ல எதிரணியினருக்குமே இது சர்ப்ரைஸ்தான். பாகிஸ்தானின் கடைசி விக்கெட்டாக மிஸ்பா உல்ஹக்கை வீழ்த்தியது அதே ஜோகிந்தர் ஷர்மாதான். ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தார். 152 ரன்களில் ஆல்அவுட்டானது பாகிஸ்தான். டோணியின் வியூகம் உலகமெங்கும் பாராட்டப்பட்டது.

கோஹ்லியிடம் வியூகம் இல்லை

கோஹ்லியிடம் வியூகம் இல்லை

இன்றும் 10 வருடங்களுக்கு பிறகு அப்படியொரு பைனல். இம்முறை பேட்டிங்கில் சாதித்திருக்க வேண்டும் இந்தியா. ஆனால் பேட் செய்தபோது எந்த வியூகத்தையும் செயல்படுத்தவில்லை கோஹ்லி. பேட்டிங் ஆர்டரை கூட மாற்றி எதிரணியை குழப்பவில்லை. விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன, பேட்ஸ்மேன்கள் கம்ப்யூட்டரில் புரோக்ராம் செய்ததை போல அதே ஆர்டரில் களமிறங்கினர்.

ஏற்கனவே சாதனை

ஏற்கனவே சாதனை

இத்தனைக்கும் ஓவல் போன்ற பேட்டிங் சாதகமான பிட்சில் இது ஒன்றும் எட்ட முடியாத ஸ்கோர் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெய்ப்பூரில் இதைவிட பெரிய ஸ்கோரை விரட்டி பிடித்திருந்தது இந்தியா. நாட்வெஸ்ட் சீரிஸ் பைனலில் இங்கிலாந்தை இதேபோன்ற பெரிய ஸ்கோர் மேட்ச் ஒன்றில், லண்டனில் வைத்து, யுவராஜ்-முகமது கைப் ஜோடி, கங்குலி தலைமையில் வீழ்த்தியது.

இதுதான் வியூகம்

இதுதான் வியூகம்

ஆனால் இன்றோ, பேட்டிங்கிற்கான எந்த வியூகமும் கோஹ்லியிடம் இல்லை. வெற்றி பெற்றால் ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிடுவதுதான் கோஹ்லியிடம் உள்ள ஒரே வியூகம் என சில ரசிகர்கள் செய்யும் கேலி உண்மை என்றாகிவிட்டது கோஹ்லியிடம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kohli couldn't made any magic which was done by Dhoni at 2007 T20 world cup final.
Please Wait while comments are loading...