For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியைவிட ஸ்மித் டாப்.. எதில் தெரியுமா?

By Staff

டெல்லி: உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கமாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை விட, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கே அதிக சம்பளம் கிடைக்கிறது.

தேசிய அணிக்காக கிரிக்கெட் வீிரர்களுக்கு அந்தந்த கிரி்ககெட் சங்கங்கள் சம்பளம் அளிக்கின்றன. இந்தியாவில் பிசிசிஐயை பொறுத்தவரை, வீரர்கள், ஏ, பி, .சி என்று தரம் பிரிக்கப்பட்டு சம்பளம் அளிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களின் இந்தாண்டுக்கான சம்பளம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அனைவரையும் விட முன்னிலையில் உள்ளார். மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஜிம்பாப்வே கேப்டனோடு ஒப்பிடுகையில், ஸ்மித் 20 மடங்கு அதிகம் வாங்குகிறார்.

கோஹ்லிக்கு ரூ.6.51 கோடி

கோஹ்லிக்கு ரூ.6.51 கோடி

இந்த ஆண்டில், ஸ்டீவ் ஸ்மித்தின் சம்பளம் ரூ.9.56 கோடியாக இருக்கும். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ரூ.8.98 கோடி சம்பாதிப்பார். அதே நேரத்தில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு, ரூ. 6.51 கோடி கிடைக்கும். மிகவும் குறைவாக சம்பாதிக்கும் ஜிம்பாப்வே கேப்டன் கிரீம் கிரிமெருக்கு, ரூ.55.95 லட்சம் கிடைக்கும்.

கோஹ்லிதான் பணக்கார வீரர்

கோஹ்லிதான் பணக்கார வீரர்

இந்த சம்பளத்தில் உள்நாட்டு டி-20 தொடர்கள் உள்ளிட்ட மற்ற வகை வருமானம் சேர்க்கப்படவில்லை. அந்த வகையில் உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் வீரர், விராட் கோஹ்லிதான்.

டெஸ்ட் விளையாடினால் ரூ.15 லட்சம்

டெஸ்ட் விளையாடினால் ரூ.15 லட்சம்

டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ அதிக சம்பளம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்லது. ஆனால், வேறு எந்த அணியையும் விட, ஒரு டெஸ்ட் போட்டிக்கு, இந்திய வீரர்களுக்கு ரூ.15 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ரவி சாஸ்திரிக்கு அதிக சம்பளம்

ரவி சாஸ்திரிக்கு அதிக சம்பளம்

அணியின் கோச்களை பொறுத்தவரை, தெற்காசிய நாடுகளில், வீரர்களைவிட, கோச்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில், இந்திய கிரிக்கெட் அணியின் கோச்சான ரவி சாஸ்திரிதான், மிக அதிக சம்பளமாக ஆண்டுக்கு, ரூ.7.61 கோடி வாங்குகிறார்.

Story first published: Thursday, October 19, 2017, 13:38 [IST]
Other articles published on Oct 19, 2017
English summary
Indian cricket team captain Virat Kohli earns less than Australian captain Steve Smith
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X