5 வருடம், 1 வயது.. சச்சினும், கோஹ்லியும் இதிலும் ஒரே மாதிரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் கோஹ்லி , அனுஷ்கா சர்மா இடையே திருமணம் நடக்க இருப்பதாக உறுதியாகாத தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்கள் சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

வரும் டிசம்பரில் கோஹ்லி கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒரு மாதம் ஒய்வு கேட்டு இருக்கிறார். அவர் தனது திருமணத்திற்காகவே ஒருமாதம் விடுப்பு கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் சச்சினை பின்பற்றும் கோஹ்லி தற்போது தனது திருமணத்திலும் சச்சினை பின்பற்றப்போவதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் சில முக்கியமான ஒற்றுமை இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

கோஹ்லிதான் அடுத்த சச்சின்

கோஹ்லிதான் அடுத்த சச்சின்

மொத்த கிரிக்கெட் உலகமே தூக்கி வைத்து கொண்டாடிய ஒரு வீரர் சச்சின். இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்த போதும் கூட சச்சின் நல்ல பார்மிலேயே இருந்தார். இப்போது வரலாறு மீண்டும் இந்திய அணியின் இன்னொரு வீரர் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறது. உலகமே இந்திய கேப்டன் விராட் கோஹ்லிதான் அடுத்த சச்சின் என்று சொல்லி வருகிறது. விராட் கோஹ்லியின் ரெக்கார்டுகளும் சச்சினை அவர் தொட்டுவிடுவார், இல்லை சச்சினை தாண்டி விடுவார் என்றுதான் கூறுகின்றது. செஞ்சுரி அடிப்பதிலும் சச்சினை கோஹ்லி நெருங்கி கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதிரியான குணம்

ஒரே மாதிரியான குணம்

சச்சின் , கோஹ்லி இருவரும் விளையாட்டில் ஒரே மாதிரி இருப்பதை விட மற்ற சில விஷயங்களிலும் கூட ஒரே மாதிரிதான் இருக்கின்றனர். டீன் ஏஜ் வயதில் அறிமுகமான இருவருமே தற்போது ஒரே மாதிரியான ஸ்ட்ரைக் ரெட் தான் வைத்து இருக்கின்றனர். மேலும் சச்சினை போலவே கோஹ்லியும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சரியாக விளையாட முடியாமல் திணறி வருகிறார். அதேபோல் அவர் அடித்த சதங்களை துரத்தி செல்வதை போலவே அவர் '90 பிளஸில்' அவுட் ஆனதையும் துரத்திக் கொண்டு செல்கிறார் கோஹ்லி. தற்போது திருமணத்திலும் அதையே செய்ய இருக்கிறார் இவர்.

கோஹ்லிக்கு டிசம்பரில் கல்யாணம்

கோஹ்லிக்கு டிசம்பரில் கல்யாணம்

இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் கோஹ்லி , அனுஷ்கா சர்மா இடையே திருமணம் நடக்க இருப்பதாக உறுதியாகாத தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்கள் சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது. இவர்கள் காதலில் பிரச்சனை வந்து சில நாட்களுக்கு பின் மீண்டும் சேர்ந்தனர். வரும் டிசம்பரில் கோஹ்லி கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒரு மாதம் ஒய்வு கேட்டு இருக்கிறார். அவர் தனது திருமணத்திற்காகவே ஒருமாதம் விடுப்பு கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கல்யாணத்திலும் சச்சின் மாதிரிதான்

கல்யாணத்திலும் சச்சின் மாதிரிதான்

இந்த நிலையில் கோஹ்லியின் திருமணத்திலும் சச்சின் திருமணத்திலும் இருக்கும் ஒற்றுமையை பலர் தெரிவித்து வருகின்றனர். அதன்படி சச்சினும் அவரது மனைவி அஞ்சலியும் சரியாக 5 வருடங்கள் காதலித்தனர். அவர்கள் காதலை வெளிப்படுத்திய போது மீடியாக்களில் வைரல் ஆனது. அதேபோல் கோஹ்லியும், அனுஷ்காவும் கடந்த 2012ல் இருந்து 5 வருடமாக காதலித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அஞ்சலி சச்சினை விட வயது அதிகமானவர். அதேபோல் அனுஷ்கா சர்மாவும் கோஹ்லியைவிட ஒரு வயது அதிகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India skipper Virat Kohli has always follows Sachin Tendulkar's in his cricket carrier. Now Kohli follows Sachin in his marriage too.
Please Wait while comments are loading...