ஒரே ஒரு டெஸ்ட் தொடர்.. ஆயிரம் சாதனைகள்.. கோஹ்லி.. விராட் கோஹ்லி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரே ஒரு டெஸ்ட் தொடர்.. ஆயிரம் சாதனைகள்.. கோஹ்லி.. விராட் கோஹ்லி!- வீடியோ

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த மூன்று போட்டிகளை கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இந்தியா தொடரை வென்று சாதனை படைத்தது போலவே கோஹ்லியும் வரிசையாக ஒவ்வொரு போட்டியிலும் நிறைய சாதனைகள் செய்து இருக்கிறார். சதம் அடித்தது, இரட்டை சதம் அடித்தது, அதிக போட்டிகள் வென்றது என சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அதேபோல் இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரின் சாதனையையும் முறியடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டக் அவுட்

டக் அவுட்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடத்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அதன்முலம் அவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் அதிக டக் அவுட் சாதனைகளை சமன் செய்தார். ஒரே வருடத்தில் கபில் தேவ் 5 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அதை கோஹ்லி சமன் செய்தார்.

50 வது சதம்

50 வது சதம்

இந்த நிலையில் டக் அவுட் அவமானத்தை முறியடிக்கும் வகையில் இரண்டாவது இன்னிங்சில் கோஹ்லி சதம் அடித்தார். இது ஐசிசி போட்டிகளில் அவரின் 50 வது சதம் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் அது அவரின் 18வது சதம் ஆகும். இதன் மூலம் இவர் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கரின் 11 டெஸ்ட் செஞ்சுரிகள் என்ற சாதனையை சமன் செய்தார். அதற்கு அடுத்த போட்டியிலேயே அடுத்தது செஞ்சுரி அடித்து அந்த சாதனையை முறியடித்தார். கேப்டனாக அது அவர் அடித்த 12 வது சதம் ஆகும்.

இரண்டாவது இரட்டை சதம்

இரண்டாவது இரட்டை சதம்

இந்த டெஸ்ட் தொடரில் கோஹ்லி இரண்டு இரட்டை சதங்கள் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 5 இரட்டை சதம் அடித்து இருந்த பிரெய்ன் லாரா சாதனையை முறியடித்தார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 6 இரட்டை சதம் விளாசிய ஒரே கேப்டன் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். மேலும் அவர் தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதம் அடித்துள்ளார்.

வேகமான 5000

வேகமான 5000

மேலும் இந்த வருடத்தில் மட்டும் இவர் மொத்தமாக 11 செஞ்சுரிகள் அடித்து இருக்கிறார். இதன்முலம் இவர் ரிக்கி பாண்டிங், கிரேன் ஸ்மித் அடித்த 9 செஞ்சுரி சாதனைகளை முறியடித்து இருக்கிறார். மேலும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்து டெஸ்டுகளிலும் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்று இருக்கிறார். மேலும் விரைவாக டெஸ்ட் போட்டியில் 5000 ரன்களை கடந்து அவர் சாதித்துள்ளார்

தொடர்ச்சியான வெற்றிகள்

தொடர்ச்சியான வெற்றிகள்

மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தாலும் இந்தியா தொடரை 1-0 என்று வென்று இருக்கிறது. இதன் மூலம் கோஹ்லி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் வென்று இருக்கிறார். 2015 ல் இருந்து 2017 வரை நடந்த அனைத்தும் டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ரிக்கி பாண்டிங் 2005ல் இருந்து 2008 வரை தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் வென்றார். தற்போது கோஹ்லி இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kohli has broken lot of records in test series against Sri Lanka. He made record in centuries, double centuries and fastest 5000.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற