டோணி கொடுக்கும் டிப்ஸ் வெற்றிக்கு காரணம்: கோஹ்லி புகழாரம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: டோணி கொடுத்த ஐடியாக்கள் பல நேரங்களில் சிறப்பாக பலன் தந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு சென்ற பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோஹ்லி மேலும் கூறுகையில், அனுபவ வீரர்கள் அணியில் இருப்பது பலமே. முந்தைய போட்டியில் பார்ட்டைம் பவுலர்களை பயன்படுத்துவது குறித்து டோணியிடம் ஆலோசித்தேன். அவர் என்னையே பந்து வீச கூறினார். அதை செய்தேன். அப்போது ரன் ரேட் சற்று குறைய ஆரம்பித்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கூட, ஃபீல்டரை ஸ்லிப்பில் நிறுத்துவதா வேண்டாமா, இந்த ஃபீல்டிங் செட்அப் திருப்தியாக உள்ளதா என்பது குறித்தெல்லாம் டோணியிடம் ஆலோசனை பெற்றேன். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Virat Kohli hailed the input of former captain MS Dhoni on the field, as India qualified for the semi-finals of the ICC Champions Trophy on Sunday.
Please Wait while comments are loading...