கோஹ்லியிடம் மோதிய கும்ப்ளே காலி.. அடுத்த குறி கங்குலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே காலியானதை போல கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியிலிருந்து கங்குலியை நீக்க இனி கேப்டன் கோஹ்லி காய் நகர்த்துவார் என்று கிசுகிசுக்கிறார்கள் பிசிசிஐ வட்டாரத்தில்.

கிரிக்கெட் அணி பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது பிசிசிஐ வேலை என்ற நிலை இருந்தபோதே, கேப்டனுக்கும் இதில் பங்குள்ளது என காட்டியவர் கங்குலி. அவர் கேப்டனாக இருந்தபோதுதான் முதல் முறையாக இந்திய அணியின் பயிற்சியாளர் vs கேப்டன் என்ற ஒரு மோதல் சூழல் உருவானது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சேப்பல் கோச்சாக இருந்தபோது, கங்குலியுடன் கடும் மோதல் உருவானது. இறுதியில் வென்றது அப்போதைய கேப்டன் கங்குலிதான்.

 கங்குலிக்கு நெருக்கடி

கங்குலிக்கு நெருக்கடி

ஆனால், கங்குலியும் அதன்பிறகு வெகு நாட்கள் அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. பிசிசிஐ மெல்ல அவரது தலைமீது ஆணி அடிக்க ஆரம்பித்து விலக்கியது. ஓய்வு பெறுவதற்கு முன்பு சில போட்டிகளில்தான் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.

 டோணி கூல்

டோணி கூல்

கங்குலி, சேப்பல் நிலையை பார்த்த பிறகு எந்த கேப்டனுக்கும், கோச்சுக்கும் தகராறு ஏற்பட்டதேயில்லை. டோணி போன்ற ஒரு கேப்டனை எந்த பயிற்சியாளர்தான் பகைத்துக்கொள்ள விரும்புவார்கள்? களத்தை போலவே பயிற்சி களத்திலும் டோணி கூலாகத்தான் இருந்தார்.

 கோஹ்லி ஆரம்பித்தார்

கோஹ்லி ஆரம்பித்தார்

ஆனால் கோஹ்லி கேப்டனான பிறகு மீண்டும் கோச்சுடன் மோதும் கலாசாரம் ஆரம்பமானது. கும்ப்ளே பேச்சை கேட்க மறுத்து ஆட்டம்போட்டார் கோஹ்லி. கடைசியில் கும்ப்ளே பதவி விலக வேண்டியதாயிற்று. ஆனால் கிரிக்கெட் அறிவுரை கமிட்டியிலுள்ள கங்குலிக்கு இதில் விருப்பமில்லை. தனது அதிருப்தியை வெளிப்படையாகவே கூறினார்.

கோஹ்லி கை ஓங்கியது

கோஹ்லி கை ஓங்கியது

புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க கோஹ்லி அழுத்தம் கொடுத்தபோதிலும், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியிலுள்ள சச்சின், லட்சுமணனைவிட கங்குலிக்குதான் கோபம் அதிகம் ஏற்பட்டது. கோச்சை நியமிப்பது தங்கள் பணி என நினைத்தார். இதனால் கங்குலிக்கும், கோஹ்லிக்கும் இப்போது மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது.

 மதிப்பு இல்லை

மதிப்பு இல்லை

கோஹ்லி வந்த பிறகு அவரிடம் ஆலோசித்துவிட்டு புதிய பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார் என கங்குலி நேற்று கூறினார். கேப்டன் கோஹ்லிக்கு பிசிசிஐ முழு ஆதரவு கொடுப்பதோடு, பயிற்சியாளரோ, கிரிக்கெட் ஆலோசனை குழுவோ யாருக்கும் மதிப்பு தருவதில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதற்கு காரணம் தற்போது பிசிசிஐயில் வலுவான ஒருதலைமை இல்லாததுதான். பிசிசிஐ, கோஹ்லி இருந்தால் போதும். போட்டியை வென்றுவிடலாம் என்ற மனப்பாங்கில் உள்ளது.

India didn't deserve to win against Windies: Kohli-Oneindia Tamil
 அடுத்த குறி

அடுத்த குறி

ஒரு உறைக்குள் இரு வாள்கள் இருக்க முடியாது என்பர். கோஹ்லியும், கங்குலியும் குணத்தால் ஏறத்தாழ ஒரே மாதிரியானவர்கள். எனவே இருவரும் அதிகாரம்மிக்க ஒரே இடத்தில் இருப்பது சாத்தியமில்லை. பயிற்சியாளராக தனக்கு வேண்டியவரை நியமிக்க முயலும் கோஹ்லி, அதற்கு முட்டுக்கட்டை போடும் கங்குலியை வெளியேற்றுவதில் கவனம் செலுத்துவார் என்கிறார்கள் பிசிசிஐ வட்டாரத்தில். எனவே இனிமேல்தான் ரியல் கேம் ஆரம்பமாக போகிறது. ஆனால், மைதானத்திற்கு வெளியே!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kohli's next target will be Saurav Ganguly who is a member of the Cricket Advisory Committee (CAC).
Please Wait while comments are loading...