For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினை முந்தினார் கோஹ்லி

By Staff

கண்டி: இலங்கைக்கு எதிரான, இரண்டாவது ஒருதின கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என, இந்தியா முன்னிலை பெற்றது. இந்த வெற்றியின் மூலம், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை, கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரில் 3-0 என அபாரமாக வென்ற இந்திய அணி, 5 ஒருதினப் போட்டிகளில் விளையாடுகிறது. கண்டியில் நேற்று நடந்த, 2வது ஒருதினப் போட்டியில், போராடி இந்திய அணி வென்றது.

Virat breaks another Sachin record


வெற்றிக்கு, 237 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 விக்கெட் இழப்புக்கு, 131 ரன்கள் என்ற நிலையில், இந்திய அணி தடுமாறியது. அப்போது ஆபத்பாந்தவனாக, அனுபவ வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, தோள் கொடுத்தார் புவனேஸ்வர் குமார். கடைநிலை வீரராக பேட்டிங்கில் களமிறங்கிய புவனேஸ்வர் குமார், விக்கெட்டை இழக்கக் கூடாது என்ற கட்டாயத்தில், டெஸ்ட் போட்டியைப் போல பொறுமையாக விளையாடி, அணியின் வெற்றியை உறுதி செய்தார். தனது முதல் அரைசதத்தை அவர் கடந்தார்.

இந்த வெற்றியின் மூலம், விராட் கோஹ்லி கேப்டனாக, தனது 24வது வெற்றியைப் பதிவு செய்தார். 32 போட்டிகளில், 24வது வெற்றியை அவர் ருசித்தார். இந்த வெற்றியின் மூலம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார். சச்சின், 23 வெற்றிகளை, 73 போட்டிகளில் பெற்றிருந்தார்.

,கேப்டன்களாக, முகமது அசாருதீன், 90 வெற்றிகளைப் பெற்றார். சவுரவ் கங்குலி, 76, தோனி, 74, ராகுல் திராவிட், 42, கபில் தேவ், 39 வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இன்டீஸ் கிளைவ் லாய்ட், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் ஆகியோரும், கேப்டன்களாக 32 போட்டிகளில், 24 வெற்றிகளைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 32 போட்டிகளில் அதிக வெற்றி என்ற சாதனை வெஸ்ட் இன்டீஸ் விவியன் ரிச்சர்ட்ஸ் தக்க வைத்துள்ளார். அவர் 32 போட்டிகளில், 26 வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், 25 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.


Story first published: Friday, August 25, 2017, 22:13 [IST]
Other articles published on Aug 25, 2017
English summary
Indian cricket team captain Virat Kohli breaks SachinTendulkar’s record, registerd 24th win as captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X