அஸ்வினுக்கு பதில் இனி நான்தானா? உண்மையை சொல்லும் குல்தீப் யாதவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்தியா அணியில் விளையாடி வரும் குல்தீப் யாதவ் சில நாட்களாக நன்றாக பெர்பார்ம் செய்து வருகிறார். இவர்தான் இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்பின் பவுலர் என அனைவராலும் பாராட்டுப் பெற்று வருகிறார்.

இப்போது இவர் அஸ்வினுக்கு சிறந்த மாற்றாக இருப்பார் என அனைவராலும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது .

இந்த நிலையில் அஸ்வினுக்கு நான் எந்தக் காலத்திலும் மாற்றாக வர முடியாது, அவர் மிகவும் திறமைசாலி என பத்திரிக்கையாளர் சந்திப்பில் குல்தீப் யாதவ் கூறினார்.

 நம்பர் ஒன் அஸ்வின்

நம்பர் ஒன் அஸ்வின்

ஒருகாலத்தில் டோணியின் வலது கையாக செயல்பட்டு வந்தார் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அணியில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட அஸ்வின் நீண்ட காலத்திற்கு நம்பர் ஒன சுழற் பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஐசிசியின் தரவரிசையில் முதல் இடம், டி-டுவண்டியில் சிறப்பான ஆட்டம் என முழு பார்மில் இருந்தார் அவர். ஆனால் அணியின் கேப்டனாக கோஹ்லி பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியின் முக்கிய பவுலரான அஸ்வின் வெளியேற்றப்பட்டார். அஸ்வினுக்கு பதிலாக சாஹல், குல்தீப் என்ற இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களைக் களம் இறக்கினார் கோஹ்லி.

 மாஸ் காட்டும் ஸ்பின் இரட்டையர்கள்

மாஸ் காட்டும் ஸ்பின் இரட்டையர்கள்

கோஹ்லியால் அணியில் சேர்க்கப்பட்ட குல்திப் யாதவ் மற்றும் சஹல் என இருவருமே இப்போது அணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஸ்பின் இரட்டையர்கள் என, வந்த இரண்டாவது சீரியசிலேயே பெயர் எடுத்துவிட்டனர் இவர்கள். அது மட்டும் இல்லாமல் அஸ்வினின் பந்துகளில் அடித்து ஆடிய மேக்ஸ்வேல் போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள் கூட சஹலின் பந்தில் அடங்கி விடுகின்றனர். நீண்ட காலத்திற்குப் பின் ஒருநாள் போட்டியில் ஹாட்டிரிக் எடுத்து குல்தீப் சாதித்து இருக்கிறார்.

 அஸ்வினுக்கு மாற்று இவர்கள்தான்

அஸ்வினுக்கு மாற்று இவர்கள்தான்

முதலில் அஸ்வினுக்கு அணியில் இருந்து இலங்கைத் தொடரில் மட்டுமே ஒய்வு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த இரண்டு ஸ்பின் பவுலர்களின் சிறப்பான ஆட்டத்தால் அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா தொடரிலும் ஒய்வு அளிக்கப்பட்டுவிட்டது. தற்போது ராஞ்சி டிரோபியில் தமிழக அணிக்காக அஸ்வின் விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் விரைவில் தனக்கு அணியில் இடம் கிடைக்கும் என் நேற்று பேட்டி அளித்திருந்தார் அஸ்வின். இந்த நிலையில் தற்போது அஸ்வினுக்கு மாற்று குல்தீப் தான் என பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

 அஸ்வினுக்கு நான் மாற்றா..?

அஸ்வினுக்கு நான் மாற்றா..?

2019ல் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் களம் இறக்கப்படுவார் என கருத்துக்கள் பொதுவாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதை குல்தீப் தற்போது மறுத்துள்ளார். அஸ்வின் என்னைவிட மிகவும் திறமைசாலி, அதே போல அதிக அனுபவம் கொண்டவர். அவருக்கு மாற்றாக என்னை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவரிடம் இருந்து நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அஸ்வின், ஜடேஜா என இருவருக்கும் மாற்றாக நான் வர முடியாது" என அடக்கமாகக் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian spin bowler guldeep yadav talks about Ashwin. He says that he cant replace ashwin. He also added that ashwin is the best ever player.
Please Wait while comments are loading...