இந்திய கிரிக்கெட் அணியின் பெஸ்ட் கோச்.. "ஜம்போ" கும்ப்ளே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: "ஜம்போ" என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் கும்ப்ளே. மிகச் சிறந்த ஸ்பின்னராக திகழ்ந்த கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கோச் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது முதல் தனது பணியை அவர் செவ்வனே செய்து வந்துள்ளார். தேவையில்லாத பேச்சுக்களே இவரிடம் கிடையாது.

சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவர் கும்ப்ளே. அவருடன் ஒத்துப் போக முடியாமல் கோஹ்லி கொந்தளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெஸ்ட் கோச்

பெஸ்ட் கோச்

கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் இந்தியா 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் 12ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது. 4 போட்டிகள் டிரா ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகச் சிறந்த ஸ்பின்னர்கள் வரிசையில் கும்ப்ளேவுக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

நம்பர் 1 பந்து வீச்சாளர்

நம்பர் 1 பந்து வீச்சாளர்

132 டெஸ்ட் போட்டிகள், 244 ஒரு நாள் போட்டிகள், 380 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார் கும்ப்ளே. டெஸ்ட் போட்டிகளில் 2506 ரன்களையும், ஒரு நாள் போட்டிகளில் 938 ரன்களையும், முதல் தரப் போட்டிகளில் 5572 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்களை வீழ்த்தி இந்திய வீரர்களிலேயே அதிக வி்க்கெட வீழ்த்திய பந்து வீச்சாளராகத் திகழ்கிறார் கும்ப்ளே. ஒரு நாள் போட்டிகளில் 337 விக்கெட்களை சாய்த்துள்ளார். முதல் தரப் போட்டிகளில் 1136 விக்கெட்கள் இவரிடம் வீழ்ந்துள்ளன.

டெல்லியில் நடந்த சாதனை

டெல்லியில் நடந்த சாதனை

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் பறித்த சாதனையும் கும்ப்ளேவிடம் உண்டு 1999ம் ஆண்டு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார் கும்ப்ளே. இதற்கு முன்பு 1956ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜிம் லேகர் இச்சாதனையைச் செய்திருந்தார். அதற்குப் பிறகு கும்ப்ளே மட்டும்தான் இதைச் செய்தார். இது இன்னும முறியடிக்கப்படாமல் உள்ளது.+

2008ல் ஓய்வு

2008ல் ஓய்வு

2008ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கும்ப்ளே. அதன் பின்னர் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு அணியில் வீரராகவும், பின்னர் மென்டார் ஆகவும் இருந்தார். பிறகு அதிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியின் மென்டார் ஆக இருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anil Kumble was the one of the best spinner India ever seen. He is the leading wicket taker in Test cricket in India.
Please Wait while comments are loading...