இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹளா ஜெயவர்த்தனா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் வீரர் மஹளா ஜெயவர்த்தனா நியமிக்கப்படவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அனில் கும்ப்ளே பதவி விலகிச் சென்ற பின்னர் தலைமைப் பயிற்சியாளருக்கு ஆள் தேடி வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்திய அணிக்கு யாரை பயிற்சியாளராகப் போட்டாலும் அவருடன் இந்திய அணியினர் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை. ஏதாவது பிரச்சினை வந்து குழப்பமாகி விடுகிறது.

அனில் கும்ப்ளேவையே இந்திய கேப்டனால் பொறுத்துக கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அடுத்து யார் இந்தப் பதவியில் "சிக்க"ப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹளா ஜெயவர்த்தனா

மஹளா ஜெயவர்த்தனா

இந்த நிலையில் இப்பதவிக்கு மஹளா ஜெயவர்த்தனா விண்ணப்பித்துள்ளாராம். இவர் இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆவார். தற்போது ஓய்வு பெற்று விட்டார். ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர். சச்சினுடன் நெருக்கமானவர்

சச்சின் ஏதாவது செய்யலாம்

சச்சின் ஏதாவது செய்யலாம்

சச்சின்தான் தற்போது கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் முக்கிய இடத்தில் உள்ளார். எனவே சச்சின், ஜெயவர்த்தனா குறித்து கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோருக்கு எடுத்துக் கூறி அவர்களை சமாதானப்படுத்தி ஜெயவர்த்தனாவுக்கு பதவியை வாங்கித் தர முயற்சிக்கலாம் என்ற பேச்சு இப்போதே கிளம்பி விட்டது.

டோணி எப்படி செயல்பட முடியும்

டோணி எப்படி செயல்பட முடியும்

இருப்பினும் மஹளா ஜெயவர்த்தனா தலைமைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெரியவில்லை. அவரைத் தேர்ந்தெடுத்தால் எப்படி டோணி, யுவராஜ் சிங் போன்ற மிக மிக சீனியர்களால் அவருக்குக் கீழ் செயல்பட முடியும் என்பதுதான் எதிர்பார்க்குரியது.

ரன் மெஷின்

ரன் மெஷின்

652 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள ஜெயவர்த்தனா 25,957 ரன்களைக் குவித்துள்ளார். 54 சதங்கள், 136 அரை சதங்களையும் குவித்துள்ளார். அடுத்து வங்கதேசத்திலிருந்து யாராவது வந்து தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாங்களான்னு பார்க்கலாம்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Lankan opener Mahela Jayawardana has applied for the post of Team India head Coach, say sources.
Please Wait while comments are loading...