அய்யயோ நான் பார்த்துட்டேன், பார்த்துட்டேன்.. டோணி சிக்ஸ் பற்றி ஐ விட்னஸ் திவாரி ஆனந்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மறுமுனையில் நின்றபடி டோணி சிக்சர் விளாசுவதை பார்க்கும் சுகமே அலாதியானது என்கிறார் புனே அணி வீரர் மனோஜ் திவாரி.

நேற்றைய குவாலிபையர்-1 ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி பைனலுக்கு சென்ற மகிழ்வில் உள்ளளது புனே அணி. ஸ்லோ பிட்ச்சான வான்கடேவில் 48 பந்துகளில் 58 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட்டானார் திவாரி.

திவாரியும், டோணியும் இணைந்து, 73 ரன்களை நான்காவது விக்கெட்டுக்கு குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

அதிரடி, சரவெடி

அதிரடி, சரவெடி

டோணி முதலில் மெதுவாக ஆரம்பித்தாலும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார். 26 பந்துகளில் 40 ரன்கள் விளாசிய டோணி, அதில் 5 சிக்சர்களை பறக்கவிட்டார். 18வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்த புனே, டோணி அதிரடி காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது.

ஹெலிகாப்டர் வந்ததுல்ல

ஹெலிகாப்டர் வந்ததுல்ல

19வது ஓவரின் முதல் இரு பந்துகளை பவுண்டரி, சிக்சர் என விளாசி விட்டு சிங்கள் எடுத்தார் திவாரி. பிறகு டோணி இரு சிக்சர்களை பறக்கவிட்டார். ஆப்சைடில் மெக்லகன் வீசிய பந்தை ஏறத்தாழ ஹெலிகாப்டர் ஷாட் பாணியில் லெக் சைடில் சிக்சருக்கு தூக்கினார். லாங் ஆப் திசையிலும் சிக்சரை பறக்கவிட்டார்.

பும்ராவும் தப்பவில்லை

பும்ராவும் தப்பவில்லை

கடைசி ஓவரில் திவாரி சிங்கிள் தட்டிவிட்டு ஓடிவந்து டோணி பேட்டிங்கை ரசித்தபடி நின்றுகொண்டார். பும்ராவின் அந்த ஓவரிலும் இரு சிக்சர்களை பறக்கவிட்டார் டோணி.

கனவு நனவானது

கனவு நனவானது

போட்டிக்கு பிறகு திவாரி கூறுகையில், நான் இதற்கு முன்பு இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளேன். ஆனால் டோணியோடு ஒரே நேரத்தில் களத்தில் நிற்க வாய்ப்பு கிடைத்ததில்லை. இந்த போட்டியில் அந்த வாய்ப்பு கிடைத்தது. டோணியோடு களத்தில் நிற்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டது.

அலாதி சுகம்

அலாதி சுகம்

மறு முனையிலல் நின்றபடி, டோணி சிக்சர்ர அடிப்பதை பார்ப்பது அலாதி சுகம். அவரது டெக்னிக்குகள், பலத்தை கொண்டு அவர் அடிக்கும் ஷாட்டுகளை பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார் திவாரி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Manoj Tiwary says, “It's a dream come true for me,". "I've been part of Indian team before, but haven't got the opportunity to bat with him. Today was a dream for me. It was a pleasure to watch from the other end, how he was hitting sixes. It shows how technique and shape can help along with power.”
Please Wait while comments are loading...