அரையிறுதியில் இந்தியாவிடம் சிக்கி அலறப்போகும் வங்கதேசம்.. இப்போவே தெறிக்கும் மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா-வங்கதேசம் அநேகமாக சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் சந்திக்க வேண்டியிருக்கும். இலங்கை மற்றும் பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு அதுகுறித்து உறுதியாக தெரியும்.

ஆனால் இந்தியாதான் பி பிரிவில் டாப் இடத்தில் இருக்கும் என்பதே வல்லுநர்கள் கணிப்பு. எனவே இந்தியா அரையிறுதியில் வங்கதேசத்தைதான் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது ஏறக்குறைய உறுதி.

வங்கதேசம் ஏற்கனவே பலமுறை இந்தியாவிடம் வாங்கிக்கட்டிய அணி. அந்த அணி வீரர்களும், ரசிகர்களும் இந்திய அணியை சீண்டுவதும் பிறகு அடி வாங்குவதும் வாடிக்கை. எனவே இந்தியா-பாகிஸ்தான் போட்டியை போலவே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து மீம்கள் களை கட்டுகின்றன.

எப்படி இருந்த அணி இப்படியாகப்போகுது

புலி மாதிரி இருந்த வங்கதேசம் இனிமேல் பொம்மை குட்டி மாதிரி ஆகப்போகிறது என கேலி செய்கிறது இந்த மீம்.

போச்சே, போச்சே

வங்கதேசம் முக்கிய போட்டிகளில் இந்தியாவிடம் அடி வாங்கி ஓடுவது வாடிக்கை. இப்போது அந்த நாட்டு ரசிகர்கள் அப்படித்தான் அமர்ந்திருப்பார்கள் என்கிறது இந்த மீம்.

வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா

பாகுபலி படத்தில் தொலைநோக்கியில் தேவசேனையையும், மகன் பாகுபலியையும் பார்த்து திடுக்கிட்டு போகும் வில்லன் கதாப்பாத்திரம் போல இந்தியா தங்களோடு மோத வருவதை பார்த்து வங்கதேசம் அஞ்சிப்போயுள்ளதாக கூறுகிறது இந்த டிவிட்.

இந்தியா கில்லி

கில்லி திரைப்படத்தின் கிளைமேக்சில் கை விலங்கு அவிழ்க்கப்பட்டதும் வில்லனை போட்டு சாத்து சாத்து என சாத்தும் ஹீரோ கதாப்பாத்திரத்தோடு இந்திய அணியை ஒப்பிட்டு, வங்கதேசத்தை பின்னி பெடலெடுக்க இந்தியா தயாராகிவருவதாக கூறுகிறது இந்த டிவிட்.

ஆஹா, அவனேதான்யா

ஆடு, மாலை, இந்த ஆளு, குடை.. இதையெல்லாம் ஒரே மாதிரி இருக்குதே என யோசிக்கும் வடிவேலு போல இப்போது வங்கதேசம், இந்தியாவிடம் சிக்கியுள்ளதாக கலாய்க்கிறது இந்த மீம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Meme on the round about India South Africa match which was held on yesterday in the Champions trophy.
Please Wait while comments are loading...