கவாஸ்கரின் ஆணவ பேச்சு... அடுத்த நாளே தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார் மித்தாலி ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜை, சச்சினுடன் எல்லாம் ஒப்பிட முடியாது என்று கவாஸ்கர் கூறிய அடுத்த நாளே நியூசிலாந்துடனான போட்டியில் தான் யார் என்பதை அவர் நிரூபித்து விட்டார்.

ஆண்கள் கிரிக்கெட் போட்டியை போல தற்போது மகளிர் கிரிக்கெட் போட்டியும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. அதுவும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர் ரசிகர்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் 34 வயதான மித்தாலி ராஜ், அதாவது இந்திய அணியின் கேப்டனின் அபாரமான ஆட்டம் என்றும் சொல்லப்படுகிறது.

 என்ன சாதனை

என்ன சாதனை

இங்கிலாந்தில் பெண்கள் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் பிரிஸ்டலில் நடைபெற்ற 23-ஆவது லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்திய மகளிர் அணி கேப்டன் 6000 ரன்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

 முறியடிப்பு

முறியடிப்பு

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 181 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,028 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த சாதனையை மித்தாலி ராஜ் முறியடித்துள்ளார்.

 சச்சின்

சச்சின்

மித்தாலி ராஜ் தொடர்ந்து 7 அரை சதங்களை கடந்தவர் என்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்படுகிறார். இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான மித்தாலி ராஜ் குறித்து கவாஸ்கர் ஆணவமான ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

 சச்சினுடன் ஒப்பிட முடியாது

சச்சினுடன் ஒப்பிட முடியாது

மித்தாலி ராஜின் சாதனை குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மித்தாலி ராஜின் சாதனை பெருமைப்படக்குரியது. அதை இந்திய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஆனால் அதற்காக அவரை சச்சினுடன் எல்லாம் ஒப்பிட முடியாது என்றார் அவர்.

 என்ன ஆணவ பேச்சு

என்ன ஆணவ பேச்சு

மித்தாலி ராஜை சச்சின் என்று ரசிகர்கள் தானே கூறுகின்றனர். சிறப்பாக செயல்படும் ஒருவரை சிறந்தவர்களுடன் உருவகப்படுத்தி அழைப்பது வழக்கமான ஒன்றுதானே. அதுபோல் தானே ரசிகர்களும் மித்தாலியை சச்சின் என்று அழைத்தனர். அதற்கு ஏன் கவாஸ்கருக்கு இத்தனை ஆணவ பேச்சு. ரசிகர்கள் பிரியத்தால் அவ்வாறு அழைப்பதாக கவாஸ்கர் கூறியிருக்கலாம். அதற்காக முகத்தில் அடித்தாற் போல் இது போல் பேசுவது நியாயமா.

Mithali slapped Gavaskar By her performance-Oneindia Tamil
 அடுத்த நாளே சாதனை

அடுத்த நாளே சாதனை

கவாஸ்கர் கூறிய அடுத்த நாளே, நியூசிலாந்துடனான போட்டியில் சிறப்பாக ஆடிய மித்தாலி 109 ரன்களை குவித்தார். அத்துடன் 6-ஆவது சதத்தையும் பெற்றார். மேலும் இந்தியா 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது சாதனை அல்லவா. தனது சாதனை மூலம் கவாஸ்கரின் முகத்தில் கரியை பூசிவிட்டார் மித்தாலி என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mithali Raj achieved again after next day of Gavaskar told that Mithali couldnot be compared with Sachin.
Please Wait while comments are loading...