For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னிக்கு சொகுசா இருக்கோம்.. ஆனா அன்ரிசர்வ்ட் கஷ்ட காலம் இருக்கே.. நெகிழும் மிதாலி

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் தான் பயணம் செய்துள்ளதாக கூறியுள்ளார் மிதாலி ராஜ்.

By Lakshmi Priya

மும்பை: மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தான் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் கேப்டனாக உள்ளவர் மிதாலி ராஜ். இவரை "லேடி சச்சின்" என்று ரசிகர்கள் அன்புடன் அழைப்பதுண்டு. "நாங்கள் பெண்கள்" என்ற நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நேற்று நடைபெற்றது.

இதில் மிதாலி ராஜ் கலந்து கொண்டு பேசுகையில், என்னுடைய பயணத்தில் ஏராளமான போராட்டங்களை சந்தித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு வீராங்கனைகளுக்கு கிடைக்கக் கூடிய அடிப்படை வசதிகள் கூட எங்களுக்கு கிடையாது.

முன்பதிவு செய்யப்படாத...

முன்பதிவு செய்யப்படாத...

தற்போதுதான் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். ரயில்களில் பயணம் செய்ததில்லை என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ஆனால் கிரிக்கெட் வீராங்கனையாக இருந்தபோதே ஹைதராபாத்திலிருந்து டெல்லி வரை முன்பதிவு செய்யப்படாத ரயிலில் நான் பயணம் செய்துள்ளேன்.

சோதனை தாங்கிக் கொண்டு...

சோதனை தாங்கிக் கொண்டு...

ஆரம்ப காலத்தில் பெண்ணாக நான் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளேன். வயது ஆக ஆக அந்த சோதனைகளை எதிர்கொள்ளத் தொடங்கியதால் மனதளவில் வலிமையடைந்தேன். நான் கிரிக்கெட் விளையாடுவது எனது தாத்தா பாட்டிக்கு பிடிக்கவில்லை.

நல்வழியை ஏற்படுத்தி...

நல்வழியை ஏற்படுத்தி...

ஆனால் எனது பெற்றோரும் சோதனைகளை தாங்கிக் கொண்டு நான் எதையும் நெகட்டிவாக எடுத்துக் கொள்ள முடியாத வகையில் எனக்கு நல்ல வழியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் என்றார்.

சாக்ஷி மாலிக் பங்கேற்பு

சாக்ஷி மாலிக் பங்கேற்பு

நாங்கள் பெண்கள் என்ற நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர்கள் சோதனைகளை கடந்து எப்படி சாதித்தார்கள் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. இதேபோல் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Story first published: Sunday, December 10, 2017, 11:57 [IST]
Other articles published on Dec 10, 2017
English summary
The Indian women’s cricket team captain Mithali Raj on Saturday recalled her journey to the top and revealed that as an Indian player she had travelled unreserved in a train.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X