இந்திய மகளிர் அணியின் "லேடி சூப்பர் ஸ்டார்" எதற்கு அடிமை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோத்பூர்: இந்திய மகளிர் அணியின் கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜுக்கு எந்த உணவு பொருள் பிடிக்கும் என்பது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

மித்தாலி ராஜ் இந்த பெயரை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாது. ஐசிசி பெண்கள் உலக கோப்பை 2017 போட்டியில் அபாரமாக விளையாடியதை யாராலும் மறுக்க முடியாது.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 181 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,028 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த சாதனையை மித்தாலி ராஜ் முறியடித்துள்ளார்.

கொள்ளை பிரியம்

கொள்ளை பிரியம்

உணவு பொருள்களை பொருத்தமட்டில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்கும். அதன்படி, அவரவர் சுவையும், பிடித்த உணவு வகையும் மாறுபடும். அதிலும் பிரபலங்களுக்கு எந்த உணவு வகை பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்வது என்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதன்படி 34 வயதான மித்தாலி ராஜுக்கு சோன் பப்படி என்றால் கொள்ளை பிரியமாம். இதை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நோ ஷேரிங்

நோ ஷேரிங்

தனக்கு பிடித்தமான அந்த சோன் பப்படியை யாருக்கும் பகிர்ந்தளிக்க மாட்டேன் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோன் பப்படி படத்துக்கு கீழ் ம்ம்ம்ம் நாவில் எச்சில் ஊறுகிறது.... இதற்கு நான் அடிமை... மன்னித்து விடுங்கள் யாருக்கும் தர மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லைக்குகளை அள்ளியது

லைக்குகளை அள்ளியது

இவரது இந்த ஒரு பதிவானது ரசிகர்களிடம் இருந்து 3,500 லைக்குகளையும், 45 கருத்துகளையும் பெற்றது. மித்தாலி சொல்வது சரிதான். யாருக்குத்தான் சோன் பப்படி பிடிக்காது.

வேறு பெயர்

வேறு பெயர்

சோன் பப்படியின் மறுபெயர் பட்டீஸா. சோன் பப்பரி என்பது வட இந்திய உணவு வகையாகும். அது கடலை மாவு, சர்க்கரை, நெய், பால், ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மித்தாலியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அவரும் நம்மை மாதிரிதான் என்பதை உணர்த்திவிட்டார்.

சச்சின் பாராட்டு

சச்சின் பாராட்டு

சோன் பப்படி பிரியரான மித்தாலியின் ரன் குவிப்பு சாதனைக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராத் கோஹ்லி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian women's cricket ODI World record breaker Mithali Raj addicts to soan papdi. As she loves it very much, she couldn't share with anyone.
Please Wait while comments are loading...